என் மலர்

  நீங்கள் தேடியது "Tobacco seized"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போடி டி.வி. கே.கே.நகரில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  மேலசொக்கநாதபுரம்:

  போடி டி.வி. கே.கே.நகரில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போடி டவுன் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

  அப்போது காளியம்மன் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் கிருஷ்ணராஜா என்பவர் தனது வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

  போலீசாரைக் கண்டதும் கிருஷ்ணராஜா தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேட்டையை சேர்ந்த அரபாத் என்பவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
  • சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  நெல்லை:

  நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டையை சேர்ந்தவர் அபுதாகிர். இவரது மகன் யாசர் அரபாத்(வயது 23).

  இவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக பதுக்கி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ேசாதனை நடத்தினர்.

  அப்போது அங்கு சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் யாசர் அரபாத்தை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி சோதனையிட்டனர்.
  • 31 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

  ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ராஜேஸ்குமார் ஆகியோர் கொண்ட போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி சோதனையிட்டனர்.

  அப்போது நெல்லை மாவட்டம் சுப்பையாபுரம் தெற்குதெருவை சேர்ந்த சேவியர்(30) என்பவர் வைத்திருந்த பையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 31 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சேவியர் மீது வழக்குபதிவு செய்து இவர் எங்கிருந்து இதனை வாங்கி வந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.
  • மேலும் 18 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

  கொடைக்கான‌ல்:

  கொடைக்கானல் நகர்ப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது.

  இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி லாரன்ஸ் அண்ணாசாலை, நாயுடுபுரம், கலையரங்கம் பகுதி, ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது ஆனந்தகிரி 2-வது தெருப் பகுதியில் ஹசன் என்பவர் நீண்ட நாட்களாக கருவாடு விற்பதுபோல் கருவாடு பார்சலோடு புகையிலை பாக்கெட்டுகளையும் மறைத்து வாங்கி வந்து விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புகையிலை சுமார் 18 கிலோ விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லாரன்ஸ் போலீசாருடன் சென்று அவற்றை பறிமுதல் செய்தார்.

  விற்பனையில் ஈடுபட முயன்ற ஹசன் என்பவருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப்பாக்கெட்டுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விற்பனையில் ஈடுபட முயன்ற நபர் மீது நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


  கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  ×