போடியில் வீட்டில் பதுக்கிய குட்கா, புகையிலை பறிமுதல்

போடி டி.வி. கே.கே.நகரில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களுடன் போலீசார்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களுடன் போலீசார்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி டி.வி. கே.கே.நகரில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போடி டவுன் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது காளியம்மன் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் கிருஷ்ணராஜா என்பவர் தனது வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

போலீசாரைக் கண்டதும் கிருஷ்ணராஜா தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com