திண்டுக்கல் அருகே ரெயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி சோதனையிட்டனர். 31 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ராஜேஸ்குமார் ஆகியோர் கொண்ட போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது நெல்லை மாவட்டம் சுப்பையாபுரம் தெற்குதெருவை சேர்ந்த சேவியர்(30) என்பவர் வைத்திருந்த பையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 31 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சேவியர் மீது வழக்குபதிவு செய்து இவர் எங்கிருந்து இதனை வாங்கி வந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com