என் மலர்
நீங்கள் தேடியது "New Transformer"
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
போளூர் மின்விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் போளூர் வடக்கு பிரிவில்-4 அத்திமூர் பிரிவில்- 3, வடமாதிமங்கலம் பிரிவில்- 4 என11 டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு போளூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமரன் தலைமை தாங்கினார்.
போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய 11 டிரான்ஸ்பர்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் மின்வாரிய செயற்கு பொறியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
- பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் மின்மாற்றி ரூ.4.26 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அப்புதி மக்களுக்கு குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதிய மின்மாற்றியை மாநகராட்சி மேயர் சரவணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, நெல்லை கோட்ட செயற் பொறியாளர் முத்துக்குட்டி, பழைய பேட்டை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், ஜன்னத்துல் சிபாயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
- நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ரூபி மனோகரன் எம்.எல.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.
நெல்லை:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைத்து, பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து செல்வதால் நொச்சிக்குளம் குளம் மறுகால் வாய்கால் சாணான்குளம் செல்லும் வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து செய்து தரும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதன்பின்பு பாளை மகாத்மா காந்திஜீ நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் அலுவலகத்தில் பணியாளர்களை சந்தித்து பேசினார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்பு அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நெசவாளர் மக்களை பெருமைபடுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மின்சார துறை பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு தலைவர்கள், மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.
- அதை சரி செய்வதற்காக புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அதை சரி செய்வதற்காக மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் உத்தரவுபடி, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் மேற்பார்வையில் ரூ.6 லட்சத்தில் புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாத், முக்கூடல் உதவி மின் பொறியாளர் பிரம்ம நாயகம் , பிரிவு அலுவலக பணியாளர்கள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.