முக்கூடல் அருகே ரூ.6 லட்சத்தில் புதிய மின்மாற்றி

முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது. அதை சரி செய்வதற்காக புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை படத்தில் காணலாம்.
புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் முக்கூடல் பிரிவுக்கு உட்பட்ட ஓடைமறிச்சான் பகுதியில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து அதை சரி செய்வதற்காக மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் உத்தரவுபடி, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் மேற்பார்வையில் ரூ.6 லட்சத்தில் புதிதாக 25 கிலோவாட் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் மகேஷ்சுவாமிநாத், முக்கூடல் உதவி மின் பொறியாளர் பிரம்ம நாயகம் , பிரிவு அலுவலக பணியாளர்கள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com