search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி சிவலூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் புதிய மின்மாற்றி
    X

    புதிய மின்மாற்றியை செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்த காட்சி.

    உடன்குடி சிவலூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் புதிய மின்மாற்றி

    • புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என சுமார் 5 வருடமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ.6.16லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி நகர் பிரிவு சார்பில் செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட சிவலூர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    எனவே புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என சுமார் 5 வருடமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ.6.16லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதை சிவலூர் ஊர் தர்மகர்த்தா முருகன் தலைமையில், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

    இதில் உடன்குடி உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) மகாலிங்கம், உடன்குடி நகர் இள மின்பொறியாளர் உமாமகேஸ்வரி, உடன்குடி ஊரகம் இளமின் பொறியாளர் சூசைராஜ், உடன்குடி மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மின்மாற்றி மூலம் 60 வீடுகள் பயன்பெறும், இதன் மூலம் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரமும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×