search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • சுடுகாடாக பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள் குப்பம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் கழிவுநீர் வாய்க்கால் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது அந்த பகுதியில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் எடுத்துச் செல்ல சுடுகாடாக பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் பொதுமக்கள் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடி யாக அகற்ற வேண்டும் என்றும் அப்படி அகற்றா விட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×