மேலப்பாளையத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி

நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி மேலப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. 
புதிய மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. 
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மேலப்பாளையம் மெயின் பஜார் பகுதியில், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின் படியும் வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டும் சீரான மின் வினியோகம் வழங்க நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற் பொறியாளர் சிதம்பரவடிவு , உதவி மின் பொறியாளர்கள் ரத்தினவேணி, கார்த்திக்குமார், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com