வள்ளியூர் அருகே ரூ.3.5 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி

சிதம்பராபுரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும்.
புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் கோட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வழிகாட்டுதலின் படியும் களக்காடு நகர்புற பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சிதம்பரா புரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர் ஏர்வாடி உபகோட்டம் செல்வகார்த்திக், உதவி மின் பொறியாளர் களக்காடு நகர்புற பிரிவு நலீம் மீரான் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com