கயத்தாறில் புதிய மின்மாற்றி- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

எல்.எல்.நகரில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் புதிய மின்மாற்றி- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on

கயத்தாறு:

கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் மற்றும் கோவில்பட்டி, நாலாட்டி ன்புதூர், எப்போதுவென்றான், கயத்தாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த செயற் பொறியாளர், காளிமுத்து, கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் முனியசாமி, குருசாமி, மிக்கேல், தங்கராஜ், வேலாயு தம், உதவி மின் பொறியாளர் பாலமுருகன், கயத்தாறு இளநிலை பொறி யாளர் சுரேஷ், சுப்பையா மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com