அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் உடன்குடியில் புதிய மின்மாற்றி அமைப்பு

நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த புதிய மின்மாற்றியினால் 60 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.
புதிய மின்மாற்றி திறப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
புதிய மின்மாற்றி திறப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

உடன்குடி:

உடன்குடி உப கோட்டம் உடன்குடி நகர் விநியோக பிரிவுக்கு உட்பட்ட, உடன்குடி பேரூராட்சி 7-வது வார்டு ஸ்டாலின் நகர் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு கூடுதல் மின் அழுத்தம்வேண்டியும், சீரான மின்னழுத்தம் வழங்கவும் தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி னர். அமைச்சரின் ஏற்பாட்டில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மின்சாரத் துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி புதிய மின்மாற்றி ரூ.4.60லட்சம் மதிப்பீட்டில் ஸ்டாலின் நகரில் அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

7-வது வார்டு உறுப்பினர் முத்து சந்திரா முன்னிலை வகித்தார். இந்த புதிய மின்மாற்றியினால் 60 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் உடன்குடி உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம், உடன்குடி உபகோட்ட பிரிவு அலுவ லர்கள் உமா மகேஸ்வரி, உடன்குடி இளமின் பொறி யாளர் (நகர்) சூசைராஜ், இளமின் பொறியாளர் (ஊரகம்) மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com