போளூர் பகுதியில் ரூ.58 லட்சத்தில் 11 டிரான்ஸ்பார்மர்

அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர் பகுதியில் ரூ.58 லட்சத்தில் 11 டிரான்ஸ்பார்மர்
Published on

திருவண்ணாமலை:

போளூர் மின்விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் போளூர் வடக்கு பிரிவில்-4 அத்திமூர் பிரிவில்- 3, வடமாதிமங்கலம் பிரிவில்- 4 என11 டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு போளூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமரன் தலைமை தாங்கினார்.

போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய 11 டிரான்ஸ்பர்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் மின்வாரிய செயற்கு பொறியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com