search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol diesel price hike"

    பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.28க்கு விற்கப்படுகிறது. #FuelPrice
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்தப்படி உள்ளன.

    இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டப்படி உள்ளது.

    இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் தினமும் உயர்ந்தப்படி உள்ளன. நேற்று பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலை காணப்பட்டது. ஆனால் இன்று லேசான விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.28க்கு விற்கப்படுகிறது.

    மும்பையில் அதிக வாட் வரி காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91 ரூபாயை எட்டி உள்ளது. புனே மாவட்டத்தில் சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94-க்கு விற்கப்பட்டது.

    டீசல் விலையையும் இன்று எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.78.49க்கு விற்பனையானது. #FuelPrice
    பெட்ரோல் கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் ரூ.470 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. #PetrolDiesel #PetrolPriceHike

    சென்னை:

    சர்வதேச விலைக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.

    பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் போது மத்திய-மாநில அரசுகளின் வாட் வரியும் அதிகரிக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது.

    தமிழக அரசுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ. 470 கோடிக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது.


    கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ. 2,255.80 கோடியாக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.71 ஆக இருந்தது. இபோது பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80-ஐ தாண்டிய நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ.2,725.80 கோடியாக அதிகரித்துள்ளது.

    இதன்மூலம் ரூ.500 கோடி கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசு பெட்ரோலிய பொருட்களின் மீது 32 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்பட்டபின்பு தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மற்றும் மது விற்பனை ஆகியவற்றுக்கு மட்டுமே வாட் வரி விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. #PetrolDiesel #PetrolPriceHike

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆட்டோக்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுள்ளது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து வருகிறது.

    இது ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் பாதித்துள்ளது. மோட்டார் தொழில்கள், சரக்கு வாகனங்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் மற்றும் ஆட்டோ கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் ஆட்டோ தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சென்னையில் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஸ்டேண்ட் அமைத்து இயக்கி வருகிறார்கள். குறைந்த தூரப் பயணத்திற்கு ஆட்டோவை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ ஓட்டக்கூடியவர்கள் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் அனைத்து பகுதியிலும் மாநகர பஸ்களுக்கு இணையாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை குறைக்கும் இந்த ஷேர் ஆட்டோக்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு பஸ் கட்டணத்திலேயே சென்று வந்தனர்.

    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இதனால் ஆட்டோவை பயன்படுத்தி வந்த மக்கள் இப்போது மாநகர பஸ்கள் பக்கம் திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் ஆட்டோக்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.40, ரூ.50 என வசூலித்து வந்த டிரைவர்கள் இப்போது ரூ.80 ஆக உயர்த்தி விட்டனர். இது பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    2013-ம் ஆண்டு 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 குறைந்தபட்ச கட்டணமும் அதனையடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்தது. இந்த கட்டணம் தங்களுக்கு போதாது, உயர்த்த வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கங்கள் போராடி வந்தன. மேலும் அதிக கட்டண வசூலிலும் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டதால் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ.80-க்கு குறைவாக கட்டணம் வசூலிப்பதில்லை. 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட இந்த கட்டணத்தை வசூலிப்பதால் பொது மக்கள் ஆட்டோ டிரைவர்களிடம் ஆங்காங்கே பேரம் பேசுவதை காண முடிகிறது. சிலர் வாக்குவாதத்திலும், தகராறிலும் ஈடுபட்டு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி விடும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது.

    இதுகுறித்து சி.ஐ.டி.யூ. நிர்வாகி மனோகரன் கூறியதாவது:-

    2013-ம் ஆண்டில் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65 ஆக இருந்தது. தற்போது ரூ.86ஐ தாண்டி விட்டது. இது தவிர உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசிடம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை.

    விரைவில் சி.ஐ.டி.யு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற உள்ளது. அதில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டோ தொழிற்சங்க மற்றொரு நிர்வாகி பாலு கூறுகையில், பெட்ரோல், விலையுடன் ஆட்டோவிற்கு பயன்படுத்தப்படும் கியாஸ் விலையும் உயர்ந்து விட்டது. ரூ.25-க்கு விற்கப்பட்ட கியாஸ் இப்போது ரூ.47 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் கியாசுக்கு மாறிவிட்டன. ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு வருவதால் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மீட்டர் போட்டு முறையாக ஓட்ட வேண்டும் என்றால் அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை காரணம் காட்டி ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதால் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். யாருமே மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேரம் பேசி தான் கட்டணம் முடிவு செய்கின்றனர். இப் போது ரூ.80-க்கு குறைவாக வசூலிப்பது இல்லை என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். #FuelPrice
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை இறக்கைக் கட்டி பறப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #FuelPrice #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 மாதங்களாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய இரு காரணங்கள்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றோடு மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் பெட்ரோல் டீசல் விலையை உச்சத்தில் வைத்துள்ளன.

    இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் 83 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கு வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை தான் கைகொடுப்பதாக உள்ளது. இந்த கச்சா எண்ணையில் பெரும்பகுதியை ஈரான் நாடு நமக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கச்சா எண்ணை வி‌ஷயத்தில் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதோடு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்காதீர்கள் என்று இந்தியா உள்பட பல நாடுகளை அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தபடி உள்ளது. இந்த விவகாரம் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரிப்புக்கு வழி வகுத்து விட்டது.

    அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக ஈரான் நாடு, தனது கச்சா எண்ணை உற்பத்தியை கணிசமாக குறைத்து விட்டது. இதனால் ஈரானில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் கச்சா எண்ணை அளவு 12 சதவீதம் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளிடம் உற்பத்தி அளவை அதிகரிக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.

    ஆனால் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை எண்ணை தயாரிக்கும் எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தினமும் தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலரை கடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 81 டாலரைக் கடந்தது. இந்த நிலையில் ரஷியா தலைமையிலான கச்சா எண்ணை ஏற்றுமதி நாடுகள் தங்களது கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 90 டாலராகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 100 டாலரையும் எட்டும் என்று யூகங்கள் நிலவுகின்றன.

    இத்தகைய சூழ்நிலையில் அடுத்த சில மாதங்களில் கச்சா எண்ணை விலை குறைய வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிந்தபடி உள்ளது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.64 ஆக இருந்தது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை இறக்கைக் கட்டி பறப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.99க்கு விற்பனையானது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 14 காசுகள் அதி கரித்துள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 13 காசாக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று டீசல் விலை 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.78.36 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் வரியில் வாட் வரிக்கு ஏற்ப விலையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.

    தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது 32.16 சதவீதமும், டீசல் மீது 24.08 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மும்பையில்தான் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு 39.12 சதவீதமும், டீசலுக்கு 38.11 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி விட்டது.

    தமிழ்நாட்டிலும் அடுத்த வாரம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்து விடும் என்று தெரிகிறது. கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 14 ரூபாயும், டீசல் 15 ரூபாயும் அதிகரித்துள்ளது.

    கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக லாரி உரிமையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் தினமும் பருப்பு வகைகள், தண்ணீர், சிமெண்ட், அரிசி மற்றும் இரும்புப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்கின்றன.

    லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலை தானாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சரக்கு புக்கிங் கட்டண உயர்வு நேற்றே உடனே அமலுக்கு வந்து விட்டது.

    எனவே விரைவில் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளன.

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.  #FuelPrice #PetrolDiesel #PetrolPriceHike

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களிடையே துன்பத்தை ஏற்படுத்தி உள்ளதால், முதலில் அதில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி ஊழல் புகாருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்தார். #NaveenPatnaik
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு கமி‌ஷன் கலாசாரம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பல்வேறு திட்டங்களும் தாமதமாகி முடங்கி கிடக்கின்றன. மாநில அரசு ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த அக்கறை காட்டுவதில்லை என்று பிரதமர் கூறினார்.

    இதற்கு நவீன் பட்நாயக் பதில் அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-


    பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒடிசா அரசு மீது ஊழல் புகார்களை கூறி இருக்கிறார்.

    உண்மையிலேயே ஊழல் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அவர் ஆய்வு செய்து பார்க்கட்டும் உச்வாலா திட்டம், ஸ்கில் மி‌ஷன் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நினைத்தால் ஆய்வு மேற்கொள்ளலாம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஸ்மேன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட ஒடிசா அரசு ஏற்கனவே சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள். மத்திய அரசு ரூ.5 லட்சத்துக்கு தான் காப்பீடு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு ரூ.7 லட்சம் காப்பீடு வழங்குகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டத்தை விட மாநில திட்டத்தில் கூடுதலாக 25 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.

    மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் இதை நாங்கள் பின்பற்றுகிறோம்.

    எங்கள் அரசு மீது வேண்டும் என்றே பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    முதலில் மத்திய அரசு அதை முக்கிய பிரச்சினையாக எடுத்து கவனம் செலுத்தட்டும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #PetrolDieselPriceHike #OdishaCM #NaveenPatnaik #PMModi
    தமிழக அரசு வாட் வரியை குறைத்து மற்ற மாநிலங்களைப் போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வரவேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். #TamilisaiSoundararajan #PetrolPrice
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் ராஜபாளையத்தில் வரும் 22, 23-ம் தேதி கூடுகிறது. இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து மேலிட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    தமிழக அரசு வாட் வரியை குறைத்து மற்ற மாநிலங்களைப் போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வரவேண்டும்.

    விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்ததாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருக்கிறார். ராஜபக்சேவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பாக காங்கிரஸ், தி.மு.க. பதில் சொல்ல வேண்டும்.

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் கண்டன பொதுக்கூட்டத்தை பா.ஜ.க. வரவேற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #PetrolPrice
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #PetrolDiesel #PetrolDieselPriceHike
    சென்னை:

    சென்னை மாநகர மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ‘ஷேர்’ ஆட்டோ பயணம். பொது போக்குவரத்து வசதி பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருப்பதால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதேசமயம் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் இருமடங்காக உள்ளதே... என்று வேதனைப்பட்டு வந்த பயணிகளுக்கு, இந்த ‘திடீர்’ கட்டண உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து ‘ஷேர்’ ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வருமானம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையில், தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை கவலையடையச் செய்துள்ளது. முன்பு தினசரி ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.400 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

    இதற்கிடையில் ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி கட்டணமும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில டிரைவர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.  #PetrolDiesel #PetrolDieselPriceHike
    பாரதிய ஜனதாவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று விசாரித்தார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
    சென்னை:

    சமீபத்தில் ஜாபர்கான்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் பெட்ரோல் விலை உயர்வது குறித்து குரல் எழுப்பினார்.

    வேகமாக மேடைக்கு சென்ற அவர், தமிழிசை சவுந்தரராஜன் அருகில் நெருங்க முயன்றார். அவரை பா.ஜனதா தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து ஆட்டோ டிரைவரை பா.ஜனதாவினர் தாக்கியதாக தகவல் பரவியது.

    இந்த நிலையில், தமிழசை சவுந்தரராஜன் ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஆறுமுகம் தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் கதிர்வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்றார். தொண்டர்கள் யாரும் தாக்கினார்களா? என்பதை கேட்டு அறிந்தார்.


    கதிரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழிசை கூறியதாவது:-

    மேடையில் தாக்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டதால் நேரில் வந்து கேட்டேன். தான் ஒரு ஆட்டோ டிரைவராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேட்டதாகவும், மது குடித்து இருந்ததால் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். யாரும் அடிக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை என்றார்.

    சில கட்சியினர் அவரை அணுகி தாக்கப்பட்டதாக கண்டன சுவரொட்டிகள் அச்சிடவும் கேட்டார்களாம். ஆனால் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
    பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.41க்கு விற்றது. #PetrolPriceHike
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபடி உள்ளது.

    கடந்த 6 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து தினமும் அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன. அதோடு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. 4 மாநிலங்கள் மட்டுமே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.41க்கு விற்றது.

    சென்னையில் சில நிறு வனங்களின் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலை 86 ரூபாயை நெருங்கியுள்ளது. டீசல் விலை இன்று 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.10 ஆக விற்பனையானது.

    பெட்ரோல் விலை மீது மராட்டியத்தில்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத், ரத்னகிரி, பீட், லாத்தூர், பர்பனி, ஹங்கோலி, நந்தூர் பார், நாண்டெட், ஜால்னா, ஜல்காவ், கோண்டியா, புல்தானா ஆகிய 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது.

    நான்டெட் மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாயை நெருங்கி விட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் கச்சா எண்ணை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.69.20 ஆக இருந்தது. கடந்த 8 மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 ரூபாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #PetrolPriceHike
    ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்பால் மாநில வருவாய் பாதிக்கப்படுகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #ThambiDurai #GST
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் பொதுமக்களிடம் குறை கேட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனுக்களை பெற்றார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆட்சி காலத்தில் தனியார் எண்ணை நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ், தி.மு.க. இடம்பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி எடுத்த முடிவுதான். அதே கொள்கை முடிவினை தற்போதைய பா.ஜ.க. அரசும் பின்பற்றி வருகிறது.

    எனவே அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துவோம்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே ஜி.எஸ்.டி.க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பிற மாநிலங்கள் ஜி.எஸ்.டி.யை ஆதரித்தன. தற்போது அந்த மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

    தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு வாட் வரி நீங்கலாக பிற வரி வசூலிக்கப்படுவதில்லை. எனவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. சுங்கவரி என பல்வேறு வரிகளை விதிக்கிறது. இதனால் மாநில வருவாய் பாதிக்கப்படுகிறது.


    18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் தற்போதைய அ.தி.மு.க. அரசை பாதிக்காது. அதனை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #GST  #PetrolPriceHike
    பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 85 ரூபாயை தாண்டியது. டீசல் ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. #FuelPriceHike
    சென்னை:

    சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது.

    எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை உயர்த்தி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 15 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் இன்று 16 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் 31 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.



    இதேபோல், டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 94 காசுகள் என விற்பனை ஆனது. இன்று டீசலின் விலை 6 காசுகள் உயர்ந்து, 78 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    சென்னையில் கடந்த 7-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் 13 காசுக்கும், டீசல் 76 ரூபாய் 17 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையிலும், டீசல் விலை 1 ரூபாய் 71 காசு வரையிலும் அதிகரித்துள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. #FuelPriceHike
    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 30 காசுகள் உயர்ந்து 85 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 94 காசுகளாகவும் விற்பனை ஆகிறது. #FuelPriceHike
    சென்னை:

    நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    அந்தவகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை வழக்கம்போல அதிகரித்து நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 85 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் இன்று 30 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் 15 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல், டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 74 காசுகள் என விற்பனை ஆனது. இன்று டீசலின் விலை 20 காசுகள் உயர்ந்து, 77 ரூபாய் 94 காசுகள் என விற்பனை ஆனது.

    பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு எங்களை வாட்டி வதைக்கிறது. பெட்ரோல் டீசல் விலை குறையாமல் போனால் பஸ் பயணத்துக்கு மாற வேண்டியது தான் என தெரிவித்தனர். #FuelPriceHike
    ×