என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto fare hike"

    • ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • புதிய செயலியை உருவாக்க ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் கோரிக்கை.

    சென்னை:

    சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என 2013-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

    ஆனாலும் இதில் பல ஆட்டோ டிரைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக பணம் கேட்கும் நடைமுறை சென்னையில் பரவலாகி விட்டது.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் கடை வீதிகள் என எல்லா பகுதிகளிலும் ஸ்டாண்டு ஆட்டோக்களை அழைத்தால் அவர்கள் ஒரு தொகை கேட்பார்கள். நாம் ஒரு தொகை சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் பேரம் பேசிதான் ஆட்டோவில் பயணிக்க முடியும். எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவது கிடையாது.

    ஓலா, ஊபர் ஆட்டோக்களில் கூட காண்பிக்கும் தொகையை விட 20 ரூபாய், 30 ரூபாய் அதிகம் தாருங்கள் என கேட்கும் வழக்கம் உருவாகிவிட்டது.

    இதனால் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் பயணிகள் அரசுக்கு புகார்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த புகார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இதற்கு முடிவு காண அரசு தற்போது முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஓலா, ஊபர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை நிறைவேற்றும் வகையில் தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக முதல் கட்டமாக கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

    ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாக குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும் போது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். அதற்காக இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.

    புதிய கட்டண விவரத்தை அரசுக்கு பரிந்துரைத் துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஆட்டோ கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்றனர்.

    • ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
    • ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.

    அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்துள்ளது.

    அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்.

    புகாரின் அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    • தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்தார்.
    • ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் முடிவு.

    வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

    ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம் என அறிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆட்டோக்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுள்ளது. #FuelPrice
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் தினமும் உயர்ந்து வருகிறது.

    இது ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் பாதித்துள்ளது. மோட்டார் தொழில்கள், சரக்கு வாகனங்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் மற்றும் ஆட்டோ கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வால் ஆட்டோ தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    சென்னையில் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஸ்டேண்ட் அமைத்து இயக்கி வருகிறார்கள். குறைந்த தூரப் பயணத்திற்கு ஆட்டோவை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ ஓட்டக்கூடியவர்கள் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் அனைத்து பகுதியிலும் மாநகர பஸ்களுக்கு இணையாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை குறைக்கும் இந்த ஷேர் ஆட்டோக்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு பஸ் கட்டணத்திலேயே சென்று வந்தனர்.

    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஷேர் ஆட்டோக்களில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இதனால் ஆட்டோவை பயன்படுத்தி வந்த மக்கள் இப்போது மாநகர பஸ்கள் பக்கம் திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் ஆட்டோக்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.40, ரூ.50 என வசூலித்து வந்த டிரைவர்கள் இப்போது ரூ.80 ஆக உயர்த்தி விட்டனர். இது பொது மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    2013-ம் ஆண்டு 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 குறைந்தபட்ச கட்டணமும் அதனையடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்தது. இந்த கட்டணம் தங்களுக்கு போதாது, உயர்த்த வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கங்கள் போராடி வந்தன. மேலும் அதிக கட்டண வசூலிலும் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டதால் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ.80-க்கு குறைவாக கட்டணம் வசூலிப்பதில்லை. 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட இந்த கட்டணத்தை வசூலிப்பதால் பொது மக்கள் ஆட்டோ டிரைவர்களிடம் ஆங்காங்கே பேரம் பேசுவதை காண முடிகிறது. சிலர் வாக்குவாதத்திலும், தகராறிலும் ஈடுபட்டு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி விடும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது.

    இதுகுறித்து சி.ஐ.டி.யூ. நிர்வாகி மனோகரன் கூறியதாவது:-

    2013-ம் ஆண்டில் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கும் போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65 ஆக இருந்தது. தற்போது ரூ.86ஐ தாண்டி விட்டது. இது தவிர உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசிடம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை.

    விரைவில் சி.ஐ.டி.யு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற உள்ளது. அதில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டோ தொழிற்சங்க மற்றொரு நிர்வாகி பாலு கூறுகையில், பெட்ரோல், விலையுடன் ஆட்டோவிற்கு பயன்படுத்தப்படும் கியாஸ் விலையும் உயர்ந்து விட்டது. ரூ.25-க்கு விற்கப்பட்ட கியாஸ் இப்போது ரூ.47 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் கியாசுக்கு மாறிவிட்டன. ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு வருவதால் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மீட்டர் போட்டு முறையாக ஓட்ட வேண்டும் என்றால் அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை காரணம் காட்டி ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதால் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். யாருமே மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப்பது கிடையாது. பேரம் பேசி தான் கட்டணம் முடிவு செய்கின்றனர். இப் போது ரூ.80-க்கு குறைவாக வசூலிப்பது இல்லை என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். #FuelPrice
    ×