பிப்ரவரி.1 முதல் கட்டணம் உயர்வு- ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டம்

தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்தார்.ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் முடிவு.
பிப்ரவரி.1 முதல் கட்டணம் உயர்வு- ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டம்
Published on

வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம் என அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com