search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thamiburai"

    ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரி விதிப்பால் மாநில வருவாய் பாதிக்கப்படுகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #ThambiDurai #GST
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் பொதுமக்களிடம் குறை கேட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மனுக்களை பெற்றார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆட்சி காலத்தில் தனியார் எண்ணை நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ், தி.மு.க. இடம்பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி எடுத்த முடிவுதான். அதே கொள்கை முடிவினை தற்போதைய பா.ஜ.க. அரசும் பின்பற்றி வருகிறது.

    எனவே அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துவோம்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே ஜி.எஸ்.டி.க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பிற மாநிலங்கள் ஜி.எஸ்.டி.யை ஆதரித்தன. தற்போது அந்த மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

    தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு வாட் வரி நீங்கலாக பிற வரி வசூலிக்கப்படுவதில்லை. எனவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. சுங்கவரி என பல்வேறு வரிகளை விதிக்கிறது. இதனால் மாநில வருவாய் பாதிக்கப்படுகிறது.


    18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் தற்போதைய அ.தி.மு.க. அரசை பாதிக்காது. அதனை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #GST  #PetrolPriceHike
    ×