search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neet"

    • நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.

    இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்ற 4 தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, இந்த மாணவர்கள் நமது மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என புகழாரம் சூட்டினார்.

    இதேபோல், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சனுக்கும், முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கும் வாழ்த்து.

    அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது, வருங்கால மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    • மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.
    • தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. வன்முறை காரணமாக அன்றைய தேதியில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த மாநிலத்தில் இந்த மாதம் (ஜூன்) 6ம் தேதி 11 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

    இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர்களின் பெயர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. மதிப்பெண் விவரங்கள் neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 78693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது.
    • தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. கலவரம் காரணமாக மணிப்பூர் மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அரியலூரில் 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது
    • கடும் சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி என 3 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மாணவிகள் அணிருந்த காதணி, தங்க சங்கிலி வளையல் உள்ளிட்ட அனைத்து அணிகலன்களையும் கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னர், வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வை எழுத 2,078 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2039 பேர் எழுதினர். 11 மாணவர்கள், 28 மாணவிகள் என 39 பேர் தேர்வெழுத வரவில்லை.

    • அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர்.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர். இதற்கான சேலம் மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாண வர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், கெங்க வல்லி, கொளத்தூர், சங்க கிரி உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5000 பேர் தேர்வு எழுதினர். மாணவ, மாணவிகள், ஹால்டிக்கெட்டில் உள்ள படி குறிப்பட்ட நேரத்தில் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற்றது.

    • நாளை(ஞாயிற்றுகிழமை) 9 மையங்களில் நடக்கிறது
    • தேர்வின் போது தேர்வர்கள் அனைவரும் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள்.

    கோவை,

    மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 7-ந் தேதி நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி கோயமுத்தூர் பப்ளிக் பள்ளி, விகேகம் சீனியர் செகண்டரி பள்ளி, புலியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, வட்டமலை பாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் அகாடமி, சிங்காநல்லூர் எஸ்.எஸ்.வி.எம்.வேர்ல்டு பள்ளி, திருச்சி ரோடு ரத்தினம் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, சவுரி பாளையம் ரோடு கேந்திர வித்யாலயா பள்ளி, நேரு நகர் சுகுணா பிப்பள்ளி ஆகிய 9 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தில் மொத்தம் 7,127 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். இதில் அரசு பள்ளியில் இருந்து 166 மாணவ- மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 42 மாணவ-மாணவிகள் என 208 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது.

    தேர்வு எழுத வருபவர்கள் மதியம் 1.15 மணிக்கு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணி முதல் 1.45 மணிவரை முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கி நுழைவு சீட்டு சரிபார்க்கப்படும்.

    மதியம் 1.45 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த மொழியில் தேர்வை எழுதலாம். நுழைவு சீட்டு, அடையாள சான்று தவிர வேறு எந்த ஆவணங்களையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    எழுது பொருட்கள், கால்குலேட்டர், பென்சில் பாக்ஸ், பென் டிரைவ், அழிப்பான்கள், செல்போன், புளூடூத், இயர்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாட்ச் பேக், பெல்ட், தொப்பி அணிய கூடாது. மேலும் ஆண் தேர்வர்கள் முழு ஸ்லீவ் சட்டைகள் அணிய கூடாது. அரை ஸ்லீப் சட்டை மட்டுமே அணிய வேண்டும். குர்தா, பைஜாம் அனுமதி இல்லை. செருப்பு அணிய கூடாது. சட்டையில் பாக்கெட் இருக்க கூடாது.

    பெண் தேர்வர்கள் எம்பிராய்டரி, பூக்கள், பட்டன்களை கொண்ட ஆடை, முழு கை நீள ஸ்லீவ் ஆடை அணிய கூடாது. அரை ஸ்லீப் ஆடை அணிய வேண்டும்.

    ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். லெக்கிங்ஸ் அணிய அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள் செருப்பு அணிய தடை. மேலும் தேர்வர்கள் காதணிகள், மூக்குத்திகள், மோதிரங்கள், பதக்கங்கள், நெக்லஸ்கள், பிரேஸ்லெட், கொலுசு போன்ற எந்த வகையான நகைகளையும் அணிய கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தேர்வின் போது தேர்வர்கள் அனைவரும் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள். நீட் ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் அளவுக்கு ஒரு புகைப்படம், புகைப்ப டத்துடன் கூடிய ஆதார் போன்ற அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வர்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். 

    • தற்கொலைக்கு முன்னதாக மாணவன் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
    • படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.

    கோட்டா:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.

    கடந்த சில தினங்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், நேற்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

    தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார். எனினும் படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.

    கோட்டா நகரில் இந்த ஆண்டு இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2023, மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
    • ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில், 2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 26-ம் தேதி தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கியூட் தேர்வு மே மாதம் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 15 பள்ளிகளில் மையம் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆர்வம் தெரி–வித்து விண்ணப்பித்து உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில பயிற்சி அளிக்–கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 26-ந் தேதி முதல் தொடங்கி சனிக்கிழமைதோறும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக 15 பள்ளிகளில் மையம் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

    திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்–கும் மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு சிறப்பு பயிற்சி பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் மட்டும் கூடுதலாக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 2 மையங்களும், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆர்வம் தெரி–வித்து விண்ணப்பித்து உள்ளனர். இதையொட்டி புதிய பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி பங்கேற்று, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உடனிருந்தார். நாளை (சனிக்கிழமை) முதல் மாவட்டத்தில் 19 மையங்களில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

    • பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
    • தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பூர் :                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். திருப்பூரில் குறைந்தது 13 ஒன்றியங்கள் தவிர கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

    • இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அதில் 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 6 ேபர், 351-400 வரை 8 பேர், 301-350 வரை 15 பேர், 251-300 வரை 27 பேர், 201-250 வரை 42 பேர், 151-200 வரை 107 பேர், 101 முதல் 150 வரை 211 பேர், 93 முதல் 100 மதிப்பெண்கள் வரை 93 பேர் என 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 162 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீட் நுழைவுத் தேர்வில் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    நெல்லை:

    நீட் நுழைவுத் தேர்வில் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    எஸ்.ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில் 713-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். என்.எம்.லட்சுமி காயத்ரி 676 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடத்தையும்,  665 மதிப்பெண்கள் பெற்று எஸ்.சாக்கேத்தராமன் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    650 மதிப்பெண்ணிற்கு மேல் 4 மாணவர்களும்,600 மதிப்பெண்ணிற்கு மேல் 6 மாணவர்களும், 550 மதிப்பெண்ணிற்கு மேல் 11 மாணவர்களும் 500க்கு மேல் 19 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் தங்களது முதல் முயற்சியிலேயே இம்மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.

    நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    ×