search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    நீட் தேர்வில் சாதனை மாணவர்களை பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் பாராட்டினார்.

    நீட் தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

    • நீட் நுழைவுத் தேர்வில் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    நெல்லை:

    நீட் நுழைவுத் தேர்வில் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    எஸ்.ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில் 713-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். என்.எம்.லட்சுமி காயத்ரி 676 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடத்தையும், 665 மதிப்பெண்கள் பெற்று எஸ்.சாக்கேத்தராமன் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    650 மதிப்பெண்ணிற்கு மேல் 4 மாணவர்களும்,600 மதிப்பெண்ணிற்கு மேல் 6 மாணவர்களும், 550 மதிப்பெண்ணிற்கு மேல் 11 மாணவர்களும் 500க்கு மேல் 19 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் தங்களது முதல் முயற்சியிலேயே இம்மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.

    நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    Next Story
    ×