search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NTA"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவுடன் நிறைவு பெற இருந்தது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

    • கியூட் முதுகலை தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
    • இந்த ஆண்டு ஜூன் 5 -ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டு முதுகலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    • கியூட் முதுகலை தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
    • இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தின் இடையில் வழங்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1 முதல் 10-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தின் இடையில் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    கியூட் இளங்கலை தேர்வு மே 21-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2023, மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
    • ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில், 2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 26-ம் தேதி தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கியூட் தேர்வு மே மாதம் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×