search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது

    • பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
    • தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பூர் :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். திருப்பூரில் குறைந்தது 13 ஒன்றியங்கள் தவிர கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

    Next Story
    ×