search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle accident"

    வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    சூளகிரி:

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவரும் இவரது நண்பர்களுமான முனிராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்திற்கு சென்றுவிட்டு தங்களது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

    சின்னகொத்தூர் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து வேப்பனப் பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

     பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் சாமிதோப்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் வசீகரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக முயன்று கொண்டிருந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை வசீகரன் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருந்து கீழப்பாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள மெயின்ரோட்டில் வந்த போது குறும்பலாபேரியை சேர்ந்த சரவணன் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வசீகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாம்பவர் வடகரை:

    சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் இசக்கி. இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் லெட்சுமணன் (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை, தாய் ஆகியோர் கேரளாவில் வசித்துவருவதால் லெட்சுமணன் அப்பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லெட்மணன் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர்  அடுத்துள்ள பெரிச்சூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது65). விவசாயியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கம்பைநல்லூரில் இருந்து திப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே போகும் போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு முனியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பைநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற முனியப்பன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணலி புதுநகரில் கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாதவரம்:

    மணலி புதுநகரில் இந்தியன் வங்கியில் காசாளராக பணி புரிந்து வருபவர் மகேந்திரன். நேற்று இரவு 7 மணியளவில் தனது மனைவி ஜெகதீஸ்வரி, மகள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கொரட்டூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஸ்வரி உயிரிழந்தார். அவரது உடலை கண்டு கணவரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் நேற்று திருப்பூர் சந்தைபேட்டைக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு மேல் பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால் லாரி சென்றது. லாரியை பின் தொடர்ந்தே சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஒரு இடத்தில் லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர் மொக்கையனும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரத்தில் சாலையில் வெட்டிப்போட்ட மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி மனைவி கதறல்

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செண்பகம் (19). கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சீராம்பாளையத்தில் வந்தபோது சாலையில் இருந்த சிறிய கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    இதனால் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளை நாகராஜ் திருப்பியபோது அங்கு ஏற்கனவே வெட்டிப்போட்டிருந்த மரத்தின்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். நாகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

    இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தி.மு.க. பிரமுகரின் மகன் உடல் நசுங்கி பலியானார்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காந்திநகர் ராஜாஜி தெருவை சேந்தவர் சன்னாசி. இவர் தி.மு.க. பிரமுகர். இவரது மகன் வாசிமலை (வயது31). வெங்கிடாஸ்திரி கோட்டையில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருணம் ஆகி நிவேதா (23) என்ற மனைவியும் வருண் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு ஓட்டல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ஆ பிரிவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.குரும்பபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாசிமலை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ராமமூர்த்தி மற்றும் முருகன் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே கறம்பக்குடியில் செயல்படும் ஒரு ஓட்டலில் வடமாநில்ததை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பட்டிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற தென்னை மரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவோணம் சப்- இன்ஸ் பெக்டர் மேகநாதன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பலியான வாலிபரின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் கீழப்பிடாகையை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜ்குமார் (வயது 25) விவசாயி. நேற்று ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் பள்ளம் செம்பிய வேலூர் பகுதியை சேர்ந்த வேதையன் மகன் செந்தாமரை கண்ணன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரையும், செந்தாமரை கண்ணனையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    பின்னர் செந்தாமரை கண்ணனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போத்ராஜ். இவரது மகன் ஆனந்தபாபு (வயது24) பி.இ. பட்டதாரியான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நடுப்பட்டியில் இருந்து தர்மபுரிக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது தொப்பூர் டோல்கேட் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ஆனந்தபாபு சாலையில் தவறி கீழே விழுந்தார். 

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே படுகாயம் அடைந்த ஆனந்தபாபுவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி அருகே லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (வயது 35).இவரது மனைவி சூரியகலா (27). இந்த தம்பதிக்கு 2 குழந் தைகள் உள்ளனர். பாலகுரு சிங்கப்பூரில் வேலை பார்த்து பார்த்து விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில் பாலகுருவும் அவரது மனைவி சூரியகலாவும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.  

    கறம்பக்குடி அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் பாலகுரு, சூரியகலா படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சூரியகலா பரிதாபமாக  இறந்தார். பாலகுரு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×