என் மலர்
நீங்கள் தேடியது "young girl killed"
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் சுந்தரி (வயது 37). இவருக்கு திருமணமாகி பிரகாஷ்(8), நரேன்(4) என்ற மகன்கள் உள்ளனர். சுந்தரியின் தங்கை ராமலெட்சுமி என்கிற ரமா. சகோதரிகள் இருவரும் பிரம்மதேசத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சண்முகவேல் (62). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இவர்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று காலை சண்முகவேலுக்கும், சுந்தரிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சண்முகவேல் திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் சுந்தரியை சரமாரியாக வெட்டினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி ரமா இதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் வெட்டு விழுந்தது. இதன் பின்னர் மீண்டும் சுந்தரியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து சண்முகவேல் தப்பி சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த சுந்தரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ரமாவை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பலியான சுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சண்முகவேலை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அம்பை போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், எதற்காக சுந்தரியை கொலை செய்தார்?. என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் இறந்தது தெரியாமல் சுந்தரியின் குழந்தைகள் பரிதவித்தபடி நின்றது பரிதாபமாக இருந்தது.
நாகர்கோவில்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 19). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மஞ்சுளாவுக்கும், அவரது எதிர் வீட்டில் வசித்த ஜோதி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதையறிந்த மஞ்சுளாவின் கணவர் மணிகண்டனும், உறவினர்களும் கள்ளக் காதலர்களை கண்டித்தனர்.
இதனால் கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், ஜோதியும் வீட்டை விட்டு வெளியேறி குமரி மாவட்டம் வந்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து கணவன்-மனைவி போல் வாழ்ந்தனர்.
மஞ்சுளா மாயமானதால் மணிகண்டன் அவரை தேடி அலைந்தார். அவர் மாயமானது பற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். பின்னர் மஞ்சுளா கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்து மணிகண்டன் இங்கு தேடி வந்தார். உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மஞ்சுளாவை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறிது காலம் மணிகண்டனுடன் வாழ்ந்த மஞ்சுளா கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலன் ஜோதியுடன் கன்னியாகுமரிக்கு ஓடி வந்தார். குழந்தைகள் நலன் கருதி மணிகண்டன், மஞ்சுளாவை தேடி கன்னியாகுமரிக்கு வந்தார். மஞ்சுளாவிடம் பேசி அவரை ஊருக்கு அழைத்து செல்ல தயாரானார்.
ஊருக்கு செல்வதற்காக மஞ்சுளாவும், மணிகண்டனும் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுடன் கள்ளக் காதலன் ஜோதியும் சென்றார். ரெயில் நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மஞ்சுளாவுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கல்லை எடுத்து மஞ்சுளா தலையில் ஓங்கி அடித்தார். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார்.
அந்த பகுதியில் நின்றவர்கள் மஞ்சுளாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா இன்று காலை இறந்தார்.
மஞ்சுளா தாக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே அவரது கள்ளக்காதலன் ஜோதி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்திருந்தனர். தற்போது மஞ்சுளா இறந்து விட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காயாம்பட்டி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நந்தினி (வயது 22).
இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாண்டி, அவரது தாயார் ராணி, உறவினர்கள் பாண்டிச் செல்வி, பாண்டிசெல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு நந்தினியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நந்தினி தனது தந்தை அமராவதியிடம் செல்போனில் அடிக்கடி தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று நந்தினி வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக உறவினர்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் அமராவதி அங்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் கருகிய நிலையில் நந்தினி பிணமாக கிடந்தார்.
வேறு யாரும் இல்லாததால் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அமராவதி மதுரை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீயில் கருகி பிணமான நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமையில் நந்தினி எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் நந்தினியின் கணவர் பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதால் நந்தினி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.






