search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth falling"

    தருமபுரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போத்ராஜ். இவரது மகன் ஆனந்தபாபு (வயது24) பி.இ. பட்டதாரியான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நடுப்பட்டியில் இருந்து தர்மபுரிக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது தொப்பூர் டோல்கேட் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ஆனந்தபாபு சாலையில் தவறி கீழே விழுந்தார். 

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே படுகாயம் அடைந்த ஆனந்தபாபுவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    காங்கயம் அருகே உள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 25) பட்டதாரி. இவரது நண்பர் செந்தில்குமார்(26) இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இவர்களது 2 பேரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் காங்கயத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    நல்லிபாளையம் பிரிவில் வந்த போது நிலைத்தடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். சுபாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் பயணத்தின் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மாவிழிபாளையம் ரெயில்வே பாலம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சோமைஹேம்பரம் (வயது 27) என்பதும் திருப்பூரில் இருந்து ஹவுரா ரெயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சோமைஹேம்பரம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டைமாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் முத்துபாண்டி (வயது 20) இவரது நண்பர்கள் ஆனந்த் (21), கோபால்(20).

    இவர்கள் 3 பேரும் கடந்த 17-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கொன்னைப்பட்டிக்கு  சென்றனர்.  பொன்னமராவதி - புதுக் கோட்டை சாலையில் பொன்னமராவதி கொப்பனாபட்டி  அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் அருகே உள்ளே வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

    இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டி பரிதாபமாக இறந்தார். ஆனந்த், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இது குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம்,புகளுர் அருகே செம்படா பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவரது நண்பர்கள் திருநெல்வேலியை சேர்ந்த  முத்துக்குமார் (26) மற்றும் சிவகங்கையை சேர்ந்த பரமசிவம் (37).

    இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புகளுர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துக்குமார் ஓட்ட தினேஷ்குமாரும், பரமசிவமும் பின்னால் அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேரும்  கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். பரமசிவம், தினேஷ்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    ×