என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle Accident"

    • திடீர் பிரேக் பிடித்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
    • இவர் தவளக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    திடீர் பிரேக் பிடித்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை குரும்பாப்பேட் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது57). இவர் தவளக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    பழனிவேல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    புதுவை-விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையத்தில் ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை அருகே வந்த போது திடீரென ஒருவர் குறுக்கு பாய்ந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க பழனிவேல் திடீரென பிரேக் போட்டார்.

    இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி பழனிவேல் உடனடியாக தனது மகன் சிவராமகிருஷ்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து தனது நண்பர் உதவியுடன் தந்தையை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனிவேல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை உழவர்கரை நண்பர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (67). வயது முதிர்ச்சி காரணமாக இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். ஜெயபிரகாசத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இவர் மோட்டார் சைக்கிளில் மது கடைக்கு சென்று மது குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுவை-விழுப்புரம் சாலையில் திருமலை தாயார்நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெயபிரகாசம் கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயபிரகாசத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெயபிரகாசம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபிரகாசம் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த 2 விபத்துக்கள் குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர்.
    • தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார்நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவரும், இவரது நண்பரும் நாகர்கோவில் அருகே உள்ள கோணத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்தது

    நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். நள்ளிரவில் நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதில் வினோத்குமாரும், அவரது நண்பரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பலி

    ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தின்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்றும் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏர்வாடி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது60). இவர் நேற்று மாலை தண்ணீர் பிடிப்பதற்காக நடுப்பட்டி சாலையை கடந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பழனியம்மாளை மீட்டு தருமபுரி அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். 

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனியம்மாள் பரிதாபமான உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காவேரிபட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாலிக்பாஷா. இவரது மகன் அஷாருதீன் (வயது 20). தொழிலாளியான இவர் நேற்று இரவு காவேரிப்பட்டணத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் போகும் போது எதிரே ஜெகதீஷ் என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அஷாருதீன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அஷாருதீன், ஜெகதீஷ் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.  

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அஷாருதீனை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக அஷாருதீன் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த பூக்கடைகாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடன்குடி:

    ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகராஜன் (வயது 33). இவர் குரும்பூரில் பூக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி வனப்பிரியா என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவரது உறவினர் சத்யராஜ் என்பவருடன் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கல்லாமொழி அருகே வந்த போது உடன்குடி பதுவைநகரைச் சேர்ந்த ஜேசுராஜ் (35) என்பவரது பைக் நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மகராஜன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜின்னா (வயது 31). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று முகமது ஜின்னா மோட்டார் சைக்கிளில் அக்கரையில் இருந்து ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப் புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஜின்னா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து நீலாங்கரை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 48). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினம்.

    தற்போது சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஓட்டு பதிவு எந்திரங்கள் உள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் அருகே நவப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சேர் வேன் எதிர்பாராத விதமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜாதா(46) என்ற மனைவியும் சஞ்ஜய் என்ற மகனும் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

    விபத்து குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கன்னிவாடி:

    சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை கிராமத்தை சேர்ந்த மரியராஜ் மகன் ஜான்ஹென்றி (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று இவர் கன்னிவாடி அருகே கரிசல்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்தார்.

    பின்னர் அவர் வட்டப்பாறையை சேர்ந்த சோனைமுத்து (31), கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ் (10) ஆகியோரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோனூர் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ஹென்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் உள்ள உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். 3 பேர் பலத்த காயங்களுடன் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை நித்திகா உயிர் தப்பியது. மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுசீந்திரம் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    என்.ஜி.ஓ.காலனி:

    பூதப்பாண்டி அடுத்த தாழக்குடியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 35). இவர் 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சுசீந்திரத்தை அடுத்த குலசேகரன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முத்துராஜ் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராஜ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தெங்கம்புதூர் கீழகாட்டு விளையைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 57). இவர், கீழக்காட்டுவிளை பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    சூளகிரி:

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவரும் இவரது நண்பர்களுமான முனிராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்திற்கு சென்றுவிட்டு தங்களது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

    சின்னகொத்தூர் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து வேப்பனப் பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

     பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் சாமிதோப்பை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் வசீகரன் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக முயன்று கொண்டிருந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை வசீகரன் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருந்து கீழப்பாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள மெயின்ரோட்டில் வந்த போது குறும்பலாபேரியை சேர்ந்த சரவணன் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வசீகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×