search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry hit"

    • சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55) . கூலித் தொழிலாளி.இவர் திண்டிவனம் எம். ஆர். எஸ். கே. கேட் அருகே டாஸ்மாக் கடைக்குஎதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரோட்டை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நாகராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

    • 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது.

    கடலூர்:

    சிதம்பரத்திலிருந்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அடை யாளம் தெரியாத முதியவர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.

    இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அவினாசியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் உள்ள உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். 3 பேர் பலத்த காயங்களுடன் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை நித்திகா உயிர் தப்பியது. மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் மோட்டார் சைக்கிளும் லாரியும் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

    சேலம்:

    சேலம் பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்(வயது 20). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் வெங்கடேஷ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சேலத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தனர். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். 

    நெய் காரப்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் பயங்கரமாக மோதியது. இதில் சதீஸ் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் வெங்கடேஷ் பலத்த காயம் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த வெங்கடேசை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பலியான சதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம் அருகே மணல் லாரி மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம கள்ள தெருவைச் சேர்ந்த சுகுமார்-வனிதா ஆகியோரின் மகன் கிஷோர் (வயது 6) இவர் தேவனாஞ்சேரியில் உள்ள பாட்டி சித்ரா வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை சித்ரா ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க மொபட்டில் கடிச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் கிஷோரும் சென்றான். அவர்கள் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி கொண்டு பின்னால் வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் லாரி மோதி சிறுவன் பலியானதை அறிந்த பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து கும்பகோணம்- தேவனாஞ்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணம் அருகில் மணல் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×