புவனகிரி அருகே லாரி மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது.
புவனகிரி அருகே லாரி மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி
Published on

கடலூர்:

சிதம்பரத்திலிருந்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அடை யாளம் தெரியாத முதியவர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.

இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com