search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polytechnic student died"

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாம்பவர் வடகரை:

    சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் இசக்கி. இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் லெட்சுமணன் (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை, தாய் ஆகியோர் கேரளாவில் வசித்துவருவதால் லெட்சுமணன் அப்பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லெட்மணன் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வாணியம்பாடி அருகே லோடு ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவன் பலியானார்.

    வாணியம்பாடி:

    ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் மாதவன் (வயது 18). இவர் வாணியம்பாடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நித்தியரசன் (20). இவர்கள் 2 பேரும் இன்று காலை வாணியம்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    நெக்குந்தி என்ற இடத்தில் பைக் சென்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதனை கண்ட அப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவன் இறந்தார். நித்தியரசன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நண்பர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்புகாடு வைரா குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஆரோன், (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆரோன் தனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் துறை பண்ணையூர் பகுதியில் உள்ள பன்றி வாய்க்காலில் குளிக்க சென்றார்.

    நண்பர்களுடன் ஆரோன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென அவர், மூழ்கினார். இதைப்பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்களும், நண்பர்களும் ஆரோனை காப்பாற்ற முயன்றனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மயங்கிய நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆரோன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. 

    இது குறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×