search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sellur raju"

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு காரணமாக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாமல் போய்விட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju

    மதுரை:

    வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமல் போய் இருக்கும்.


    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது அவதூறு பேச்சுகளை நிறுத்தி இருப்பார். மழை காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju

    அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயன்று வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #TTVDhinakaran
    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் இன்று கூட்டுறவுத்துறை சார்பில் சிறு வணிகக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 152 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 57 லட்சத்து 60 ஆயிரம் சிறு வணிக கடன் உதவி வழங்கினார்.


    தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவுத்துறை மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தது. ஜெயலலிதா பொறுப்புக்கு வந்த பிறகு அந்த துறையை லாபகரமாக மாற்றினார்.

    தமிழக கூட்டுறவுத்துறை சிறப்பான நிர்வாக செயல்பாட்டுக்காக 24 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கடனுதவி திருப்பரங்குன்றம் தேர்தலையொட்டி வழங்கப்படவில்லை. தமிழகமெங்கும் இந்த திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்னும் 25 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்க உள்ளோம். இந்த ஆட்சி 3 மாதத்தில், 6 மாதத்தில் போய்விடும் என்று தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர். ஆனால் தற்போது 18 மாதங்களை கடந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சியை தந்து வருகிறோம். இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறுகையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக தினகரன் கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும். அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயன்று வருகிறார். இந்த பிரச்சனைக்கு ஓ.பன்னீர் செல்வம் விரிவாக விளக்கம் அளிப்பார் என்றார்.

    விழாவில் நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பாரி, ஓம்.கே.சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ADMK #TNMinister #SellurRaju #TTVDhinakaran
    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது எல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடத்துவது தி.மு.க. தமிழகத்தை சூறையாடிய இந்த கட்சியை மக்களும் புறக்கணித்து எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிளுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஆனால் கருணாநிதி விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார். இறுதிக்கட்ட போரில் உண்ணாவிரத நாடகம் நடத்தி பல ஆயிரம் அப்பாவி மக்கள், குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த கட்சி தி.மு.க.

    இப்போது உத்தமர் வேடம் போடுகிறார்கள். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தளபதியாக இருக்கிறார். அவர் அ.தி.மு.க. அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார். புலியாக இருந்த கருணாநிதியாலேயே முடியவில்லை. பூனையாக இருக்கும் ஸ்டாலினால் அ.திமு.க.வை ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழல் செய்து ஆசியாவில் முதல் பணக்காரர் இடத்தை பிடித்தது யார்? என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. யார் ஊழல்வாதி என்று நிரூபிக்க ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

    எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தினகரன் எங்களுக்கு எதிரி கிடையாது. இதனை வருகிற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் தி.மு.க.-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் அப்பாவி குழந்தைகள் கூட இலங்கையில் கொல்லப்பட்டனர்.

    அப்பாவி தமிழர்கள் கொலைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு முழு உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

    எனவே தான் போர் குற்றவாளிகளாக நிறுத்தி இந்த கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    அ.தி.மு.க. அரசை வீழ்த்திவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் கூறும் குற்றங்களுக்கு எந்த முகாந்தரமும் இருக்கிறதா? என்றால் இல்லை.

    தமிழக மக்களை ஏமாற்றி பலகோடி சொத்துக்களை குவித்தது யார்? என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே உத்தமர் வேடம் போடுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பே கிடையாது.

    இதற்கு ஒரு வாய்ப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் விரைவில் தி.மு.க.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. பேசியதாவது:-

    ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.

    தி.மு.க. வீழ்கிற கட்சி. இனி அது ஒருபோதும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாது. கட்சி தொண்டர்கள் எல்லாம் முதல்வராகி விட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது போல நம்மை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ஒருவர் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். இதனால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

    எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் நிலைமை எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அது போல தான் புதிதாக கட்சி தொடங்கியவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரிய புள்ளான், நீதிபதி, மாணிக்கம், கோபால கிருஷ்ணன் எம்.பி., திரவியம், எம்.எஸ்.பாண்டியன், சாலைமுத்து, வெற்றிவேல், பரவை ராஜா, சோலைராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், நிர்வாகிகள் மாரிச்சாமி, கருப்புசாமி, கே.வி.கே. கண்ணன், பிரிட்டோ முத்துவேல், ஏ.பி.பாலசுப்பிரமணி, முத்துக்குமார், முனியாண்டி, முத்து ராமலிங்கம், கலைச் செல்வம், அபுதாகீர், ஐ.பி. எஸ்.பாலமுருகன், திருநகர் குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    மறைந்த முதல்வர் அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    மதுரை நகருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாம் அனைவரும் அ.தி.மு.க. இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். விரைவில் நடக்க உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வில் மட்டும் தான் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கும். கட்சிக்கு உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும். எனவே தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும்.

    கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மதுரையில் முதலில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30-ந் தேதி சென்னையில் நிறைவு விழாவாக நடக்கிறது.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், சோலைராஜா, பரவை ராஜா, கருப்பு சாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கம், முத்துவேல், வக்கீல்கள் தமிழ்செல்வன், ஏ.பி.பாலசுப்பிரமணி, பாஸ்கரன், கறிக்கடை கிருஷ்ணன், எம்.டி.ரவி, கஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் லட்சுமி, இந்திராணி, சண்முகவள்ளி, கலாவதி தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    முதல்-அமைச்சர் பாரபட்சம் காட்டமாட்டார், எச்.ராஜா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju #hraja

    மதுரை:

    மதுரையில் இன்று 2-வது கட்டமாக வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. அந்தந்த வாக்குச் சாவடிகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குச் சாவடிகள் முன்பு அமர்ந்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.

    காளவாசல், சொக்கலிங்கநகர் வாக்குச் சாவடிகளில் அ.தி.மு.க. வினரின் வாக்காளர் சேர்ப்பு பணிகளை அமைச்சர் செல்லூர்ராஜூ பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் வாக்கு அளிக்க வசதியாக 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக தேர்தல் ஆணையம் 4 சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

    இன்றைக்கு 2-வது கட்டமாக வாக்காளர் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வந்து விண்ணப்பித்து செல்கிறார்கள். இது அவர்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை காட்டுகிறது.

    இன்று மனு கொடுத்த இளம்பெண் சுபாசினி, பலமுறை மனு கொடுத்தும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார். இது போன்ற குறைகள் இனி வரும் காலங்களிலும் ஏற்படாத வகையில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்குச்சென்று நேரடியாக ஆய்வு செய்து தகுதியான நபர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

    தமிழக முதல்வர் மற்றும் காவல் துறையினரை விமர்சித்து பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். கருணாஸ் எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது.


    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா விவகாரத்திலும் விரைவில் நடவடிக்கை இருக்கும். முதல்-அமைச்சரின் நடவடிக்கையில் பாரபட்சம் இருக்காது.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு அ.தி.மு.க. அரசு மதிப்பளிக்கும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கையில் இருந்து சிறிதளவும் பின் வாங்க மாட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், சோலை ராஜா, பரவை ராஜா, கருப்பசாமி மற்றும் பலர் இருந்தனர். #ministersellurraju #hraja

    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். அவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    வேலூர்:

    காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.

    ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. இந்தாண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படுகிறது. வேளண்மை கூட்டுறவு சங்கங்களில் ரசாயன உரத்துடன் இயற்கை உரமும் விற்பனை செய்யப்படுகிறது.


    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். கசாப்பு கடைக்காரன் காரூன்யம் பேசுவது போல் உள்ளது. ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி தான் கலைக்கப்பட்டது. சர்க்காரியா கமி‌ஷனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சியும் தி.மு.க. தான்.

    தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

    தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    இனி வரும் தேர்தல்களில் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #MinisterSellurRaju #MKStalin
    மதுரை:

    மதுரை முனிச்சாலை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    உலகத்திலே யாரும் சிந்திக்காத அளவிற்கு யோசித்து அண்ணாவின் பெயரை கட்சிக்கும், அவரது உருவத்தை கட்சியின் கொடியிலும் வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால் அண்ணா என்ற ஒருவர் பிறந்தார், இருந்தார் என்றே யாருக்கும் தெரிந்து இருக்காது.

    அண்ணாவின் வழிப்படி கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து மக்களுக்காக சத்துணவு திட்டம் தொடங்கி மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தந்தவர் கலியுக கர்ணனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாரிசு என மதுரையில் செங்கோல் கொடுத்து ஜெயலலிதாவை அரசியல் வாரிசு ஆக்கினார். ஜெயலலிதா ஆட்சியில் காவிரி பிரச்சினை தீர்ந்தது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியது, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர்.

    மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், நம்மை அன்றாடம் வசைபாடும் டி.டி.வி. வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தந்தவர் ஜெயலலிதா.

    மதுரை மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.150 கோடி செலவில் பறக்கும் பாலங்கள், உயர் மட்ட பாலங்கள் மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1600 கோடி செலவில் குடிநீர் திட்டம் ரூ.1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.250 கோடி செலவில் சுற்று சாலை போன்ற நல்லத்திட்டங்களை கொண்டு வரும் இந்த அரசை முக.ஸ்டாலின் எப்படி ராஜினாமா செய்ய சொல்ல முடியும். ஊழல்வாதிகளே அதிகமாக இருக்கும் தி.மு.க.வினர் எப்படி அ.தி.மு.க.வினர் மீது ஊழல் குற்றசாட்டு கூற முடியும்.

    மேலும் ஜெயலலிதா நினைவிடம் மெரினாவில் கட்டக்கூடாது என்பதற்காக வழக்கு தொடர்ந்த தி.மு.க.வினர் கலைஞருக்காக ஒரே இரவில் வழக்குகளை வாபஸ் பெற்ற தி.மு.க.வினர் இப்படி எங்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயமா, நீதியா? இனி வரும் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சி தலைவராகக்கூட வர முடியாது. இது அ.தி.மு.க.வினரின் விருப்பம் அல்ல பொதுமக்களின் விருப்பம்.

    மு.க.ஸ்டாலினால் மு.க.அழகிரியையே சமாளிக்க முடியவில்லை. எங்களை மு.க.ஸ்டாலினால் சமாளிக்க முடியாது. வாருங்கள் திருப்பரங்குன்றம் தேர்தலில் சந்திப்போம். மு.க.ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் மக்கள் படை உள்ளது. இளைஞர் படை, மாணவர் படை உள்ளது. நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterSellurRaju #MKStalin
    முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். #SellurRaju #MKAlagiri
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் தன்னை இணைக்க வற்புறுத்தி வந்தார் மு.க. அழகிரி. ஆனால் கட்சி மேலிடம் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மறுத்து வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மு.க.அழகிரியை பாராட்டி பேசினார்.

    மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மு.க. அழகிரியின் தேர்தல் வியூகம் சிறப்பாக இருந்தது என்றும், அவர் தி.மு.க. தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என்றும் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த அமைதி பேரணியை மு.க.அழகிரி சிறப்பாக நடத்தியதாகவும் செல்லூர் ராஜூ பாராட்டியது மு.க. அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அமைச்சரை நேரில் சந்திக்க மு.க. அழகிரி முடிவு செய்தார். இந்த தகவல் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 10 மணி அளவில் மதுரை பாலம் ஸ்டே‌ஷன் ரோட்டில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு மு.க.அழகிரி சென்றார். வாசலில் நின்று அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் மு.க.அழகிரியை வரவேற்றனர்.

    பின்னர் வீட்டில் அருகருகே அமர்ந்து இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த மு.க.அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார் மரணம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.


    வெளியே வந்த மு.க.அழகிரியிடம் நிருபர்கள் இந்த சந்திப்பு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி, தாயாரை இழந்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் கூறுவதற்காகவே வந்தேன். மற்றபடி நீங்கள் எதிர்பார்ப்பது போல வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    மு.க.அழகிரியுடன் அவரது ஆதரவாளர்கள் கவுஸ்பாட்சா, மன்னன், முபாரக்மந்திரி, சின்னான், கோபிநாதன், உதயகுமார். எம்.எல்.ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். #SellurRaju #MKAlagiri
    தி.மு.க.வின் பல்வேறு இடையூறுகளை தாண்டி அமைதி பேரணியை மு.க. அழகிரி சிறப்பாக நடத்தி உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்தார். #ministersellurraju #alagiri

    மதுரை:

    வாக்காளர் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல் சிறப்பு முகாம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது தந்தை கருணாநிதி இறந்த 30-வது நாளில் அமைதி பேரணியை அவர் நடத்தினார்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து இதில் பங்கேற்றனர். தி.மு.க.வின் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி பேரணியை சிறப்பாக நடத்தி காண்பித்தார். இதன் மூலம் மு.க. அழகிரியின் பணிபற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரது எதிர்காலம் பற்றி போக போகத்தான் தெரியவரும்.


    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை, மாநகர் மாவட்டத்திலும், புறநகரிலும் நிறைய இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். எனவே நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே. போசை வெற்றி பெற வைத்தார். தி.மு.க. மெகா கூட்டணியில் இருந்த போதும் அந்த கட்சியால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

    தமிழகத்தில் 234 தொகுதி களிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju #alagiri

    அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் நாளை மதியம் நடக்கிறது. #MinisterSellurRaju
    மதுரை:

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ. அவரது தாயார் ஒச்சம்மாள் (வயது 90).

    கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஒச்சம்மாள் சிகிச்சை பெற்று வந்தார்.

    சில நாட்களாக அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் ஒச்சம்மாள் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை செல்லூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.

    தாயார் மரணம் அடைந்ததை அறிந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    ஒச்சம்மாளின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஒச்சம்மாளின் உடல் தகனம் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடக்கிறது. செல்லூரில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தத்தனேரியில் தகனம் செய்யப்படுகிறது.

    அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    நாளை நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். #MinisterSellurRaju

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju #MiniSuperMarket
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் சதாசிவம் சாலையில் உள்ள ரே‌ஷன் கடை அருகில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

    இதுபோல தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 மினி சூப்பர் மார்க்கெட் படிப்படியாக திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 5 மினி சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படுகிறது.

    சிறு சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 300 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து 5 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    குடியிருப்பு பகுதிகளில் இந்த மினி சூப்பர் மார்க்கெட் அமைக்கப்படுதால் பொது மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற வசதியாக இருக்கும். மற்ற மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளை விட விலை குறைவாக பொருள் தரமாக இருக்கும்.

    கோப்புப்படம்

    லாபம் நோக்கமில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திறக்கப்பட உள்ளது.

    தரமணி, ஐ.ஐ.டி., சூளைமேடு, காமராஜர் நகர், ராயப்பேட்டை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளையொட்டி 4 மினி சூப்பர் மார்க்கெட் கடைகள் திறக்கப்படும்.

    ஏற்கனவே திருச்சியில் மினி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. மதுரையில் 3 இடங்களிலும் பிற மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தங்களுக்கு எதிரியே இல்லை என்றும் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். #TNMinister #SellurRaju
    மதுரை:

    வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள மாடக்குளம் கண்மாய் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த 17 மாதத்தில் ரூ. 48 ஆயிரம் கோடி அளவிற்கு பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எங்களுக்கு எதிரியே இல்லை. எதிர்க்கட்சியான தி.மு.க. டெபாசிட் வாங்க முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தமிழக அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju
    ×