search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Century festival"

    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக  பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஆனால், அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார். பின்னர் மீண்டும் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர், 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரும் நேற்று வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.


    இந்நிலையில் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது குறித்து ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 13 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    கோவை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

    இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை 6 மணியளவில் கோவை மத்திய சிறையில் உள்ள 18 தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று ஆயுள் தண்டனை கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    மதுரை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதில் 12-வது கட்டமாக மதுரை சிறையில் இருந்து குமரேசன், கருப்பையா, பெருமாள், சுப்பிரமணியன், பிச்சை, கனி ராஜா, பஞ்சராசு, நடேசன், மாதவன் ஆகிய 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுவரை மதுரை மத்திய சிறையில் இருந்து 221 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து இன்று 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

    ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
    மதுரை ஜெயிலில் இருந்து 11 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதனையடுத்து மாநிலம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகள், பல்வேறு கட்டங்களாக நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் முருகன், கணேஷ்பாபு, கருப்பசாமி, பிரபு கண்ணன், ஆனந்தராஜ், ஆண்டிசாமி, சரவணன், ஜெயபால், ராஜா, ராஜசேகரன், பொன்வேல் ஆகிய 11 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

    மதுரை ஜெயிலில் இருந்து இதுவரை 11 கட்டங்களாக 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
    சென்னையில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெற்று வருகிறது.
     
    இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் எம் ஜி ஆர் பாடல்களை பாடி பாடகராக அசத்தினார். பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவும் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    இந்நிலையில், மாலை 4 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் நூற்றாண்டு விழா நிறைவு மேடைக்கு வருகை தந்தனர்.  



    மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் பழனிசாமி வெளியிட துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

    பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஆள் திரட்ட பஸ்களை கொடுக்கும்படி பள்ளி கல்லூரிகளை மிரட்டுவதா? என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #ADMK #EdappadiPalaniswami #MGRCenturyFestival
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எந்த வழி வந்த வழியோ, அந்த வழி தான் செல்லும் வழியாகவும் இருக்கும் என்பதைப் போன்று குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தவர்கள் அனைத்தையும் குறுக்கு வழியில் தான் செய்வர் போலிருக்கிறது. சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு ஆள் திரட்டுவதற்காக ஆட்சியாளர்கள் செய்யும் உருட்டல், மிரட்டல் வேலைகள் அதை உறுதி செய்துள்ளன.

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நாளை மறுநாள் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பும், கோபமும் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் நாற்காலிகள் மட்டுமே பார்வையாளர்களாக பங்கேற்றன.

    சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவுக்காவது கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்களை சென்னைக்கு அழைத்து வருவதற்காக அங்குள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அவற்றின் வாகனங்களை தர வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

    சில கல்லூரிகள் அவற்றின் மாணவர்களையும் சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதை மதித்து மாணவர்கள் மற்றும் வாகனங்களை அனுப்பி வைக்காத கல்வி நிறுவனங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயரதிகாரிகள் நேரடியாகவே எச்சரித்திருக்கின்றனர். வாகனங்களுக்கான எரிபொருளையும் கல்வி நிறுவனங்களே நிரப்பித் தர வேண்டும்; இல்லாவிட்டால் கல்வி நிறுவன வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


    சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தனிப்பட்ட முறையில் தமது பலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயம் முதலமைச்சருக்கு இருப்பதால், தமது சொந்த மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் ஆட்களை அழைத்து வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    இதனால் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை சென்னை விழாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மாணவர்களின் படிப்பை கடுமையாக பாதிக்கும். இதைக்கூட உணராமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்களை அனுப்ப கட்டாயப்படுத்துவதிலிருந்தே, மாணவர்களின் நலனிலும், கல்வி வளர்ச்சியிலும் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை உணர முடியும்.

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே, விழாக்களுக்கு கூட்டம் சேர்க்க மாணவர்களை அழைத்துச் செல்வது தான் வாடிக்கையாகவுள்ளது. இதற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு எம்.ஜி.ஆர் விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு தடை விதித்தது. ஆனால், அதற்குப் பிறகும் சாதாரண உடைகளில் மாணவர்களை அழைத்துச் செல்வதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாகி விட்டனர்.

    உள்ளூர் அளவில் அரங்கேற்றப்பட்டு வந்த இந்த அத்துமீறல், இப்போது சென்னை விழாவுக்கு மாணவர்களையும், வாகனங்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரும் அளவுக்கு நீண்டிருக்கிறது.

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதால் தமிழக மக்களுக்கு 10 பைசாவுக்குக் கூட பயன் இல்லை. அரசியலில் முகவரியை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கும் பினாமிகளுக்கு அடையாளம் வேண்டும் என்பதற்காகத் தான் எம்.ஜி.ஆரின் 102ஆவது ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டதோ, அங்கெல்லாம் மக்களுக்கு தொல்லைகளும், நெருக்கடிகளும் தான் பரிசாகக் கிடைத்தன. 30.08.2017 அன்று வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

    தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி கல்லூரியின் திடல் சிதைக்கப்பட்டது. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, கோவையில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி சாலையில் சாய்ந்த ரகு என்ற மாணவர் பின்னால் வந்த வாகனம் மோதி உயிரிழந்தார். இவ்வளவு இழப்புகளுடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டுமா? என்பது தான் வினா.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானவர்களில் பெரும்பான்மையானோர் அடக்கத்துடன் ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால், அதிர்ஷ்டத்தில் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி அன் கோவின் ஆட்டம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இவர்களின் ஆட்டத்திற்கு விரைவில் நீதிமன்றம் முடிவு கட்டும்; தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss #ADMK #EdappadiPalaniswami #MGRCenturyFestival
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #MGRCenturyFestival #ADMK #ThambiDurai #MKStalin
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை கரூர் விஸ்வநாதபுரி பகுதியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை தி.மு.க. புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. இது அரசு விழா என்பதால் அவர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அறிஞர் அண்ணா, தேர்தலின்போது எம்.ஜி.ஆர். இல்லாமல் தி.மு.க. வெற்றி கொள்ளாது என கூறினார்.

    மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்றியதை பார்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அதேபோல் கலைஞரும் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.

    எம்.ஜி.ஆர். தனியாக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து இருக்காவிட்டால் தேசிய கட்சிகள் வலுவாக காலூன்றி இருக்கும். தமிழகத்தில் என்றும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கான ஒரு சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.


    அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்- அமைச்சராக்க பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். அந்த நன்றியை மு.க.ஸ்டாலின் மறந்து விடக்கூடாது.

    எனவே கட்சி ரீதியாக பார்க்காமல் இதை அரசு விழாவாக கருதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். காங்கிரசோடு அ.தி.மு.க. தொடர்பில் உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினால் தி.மு.க-காங்கிரசை விட்டு விலகி செல்கிறது என்றுதான் பொருள்.

    இதனைத்தான் நான் பலமுறை கூறியுள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGRCenturyFestival #ADMK #ThambiDurai #MKStalin
    புதிது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள் என்று விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். #TNMinister #RajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

    அ.தி.மு.க. சோதனையான காலகட்டத்தை தாண்டி இயங்கி கொண்டு இருக்கின்றது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சிலர் பகல் கனவு கண்டனர். இன்று கட்சியும், ஆட்சியும் பாதுகாப்பாக உள்ளது.

    கட்சி, இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில்தான் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோன்று வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில் பூத் ஏஜெண்ட் நியமிக்கப்பட வேண்டும். ஒரு பூத் ஏஜெண்ட் 100 வாக்குகளை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். உழைக்கக்கூடிய அத்தனை பேருக்கும் பதவி காத்திருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்குதான் வாக்களிக்க உள்ளார்கள்.

    புதிது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள். கமல்ஹாசன், ரஜினி ஆரம்பித்துள்ள கட்சி ஒரு அமாவாசைக்கு கூட தாங்காது. அமாவாசையோடு காணாமல் போய் விடும்.

    தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். தி.மு.க. எதிர்கட்சி வரிசையில் இருக்கும். ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், தலைவர், துணைத்தலைவர் பதவிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    ஆலோசனை கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜவர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #TNMinister #RajendraBalaji
    சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    மறைந்த முதல்வர் அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    மதுரை நகருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாம் அனைவரும் அ.தி.மு.க. இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். விரைவில் நடக்க உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வில் மட்டும் தான் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கும். கட்சிக்கு உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும். எனவே தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும்.

    கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மதுரையில் முதலில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30-ந் தேதி சென்னையில் நிறைவு விழாவாக நடக்கிறது.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், சோலைராஜா, பரவை ராஜா, கருப்பு சாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கம், முத்துவேல், வக்கீல்கள் தமிழ்செல்வன், ஏ.பி.பாலசுப்பிரமணி, பாஸ்கரன், கறிக்கடை கிருஷ்ணன், எம்.டி.ரவி, கஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் லட்சுமி, இந்திராணி, சண்முகவள்ளி, கலாவதி தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் பெயர்களுடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது. #MKStalin
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் இந்த விழா நடத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது பெயர்களுடன் தி.மு.க. முன்னணி தலைவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரது பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் பெயரும் அழைப்பிதழில் உள்ளது. இதன்மூலம் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், தினகரன் எம்.எல்.ஏ.வும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, அரசு விழா என்ற முறையில் அழைப்பிதழில் பெயர்களை போட்டிருப்பார்கள்.

    இதில் பங்கேற்பது குறித்து இதுவரையில் கட்சி தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் இல்லை என்றார்.  #MKStalin #Kanimozhi #TTVDhinakaran
    டிடிவி தினகரன் வரும் தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran
    நாகர்கோவில்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர் தி.மு.க.வின் ஊழல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் வழியில் வந்த ஜெயலலிதா தி.மு.க.வை தனது அரசியல் எதிரியாகவே கருதினார்.

    அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மக்களிடம் நேரடியாக சென்றடைந்த வண்ணம் இருந்தன. அம்மாவின் ஆட்சியின் நலத்திட்டங்கள் இப்போது தொடர்நது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அசைக்க முடியாத சக்தியாக அம்மா வழங்கிய ஆட்சி நம்மிடம் உள்ளது. இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம். அசைத்து விடலாம் என்று பலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.


    அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன். இன்று கழகத்திற்கு சொந்தம் கொண்டாடி 40 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என்று மக்கள் கைதட்டி சிரிப்பாய் சிரிக்கின்ற அளவுக்கு பேசி வருகிறார். அவர் வரும் தேர்தலோடு இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு பொய் குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பார்க்கிறார். அவரது புளுகு மூட்டைகளை மக்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை.

    அவருக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், திருவாரூர் இடைத்தேர்தலிலும் நேருக்கு நேர் நின்று சந்திக்கட்டும். அவரை எதிர்கொள்ள கழகம் தயாராக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தயார் தானா? என்று கேட்க விரும்புகிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை யாராலும் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக, பேரியக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த சக்தியாலும் அம்மாவின் ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார். #ADMK #OPanneerselvam #TTVDhinakaran #MKStalin
    ×