search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai central jail"

    • பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மதுரை:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் கே.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). இவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்து வந்துள்ளது.

    கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இவரும், இவரது தந்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் அவரது தந்தைக்கு ஜாமின் கிடைத்து வெளியே சென்றார். ஆனால் அஜித்குமாருக்கு ஜாமின் கிடைக்காததால் தொடர்ந்து அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கஞ்சா பழக்கத்தற்கு அடிமையாகி இருந்ததால் அவர் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கின் வாய்தாவிற்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மாலை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இதற்கிடையே சில மாதங்களாக தனக்கு தானே பேசிக்கொள்வதுமாகவும் இருந்துள்ளார்.

    இதனால் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக மனநோயாளிகள் சிகிச்சை பெறுபவர்களுக்கான தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம் போல் உணவு அருந்தி விட்டு வந்தவர் திடீரென மின்விசிறியில் துண்டை மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட சிறைக்காவலர்களும், சக கைதிகளும் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ரெயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய சிறையில் நடந்த அதிரடி சோதனையில், 2 செல்போன்கள் சிக்கின. இது தொடர்பாக 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Maduraicentraljail
    மதுரை:

    தமிழகம் முழுவதும் சிறைகளில் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கைதிகளிடம் புகையிலை பொருட்கள், செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதை தடுக்கும் வகையில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் பல்வேறு சிறைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறையில் இன்று உதவி ஜெயில் அதிகாரி இளங்கோ தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

    கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அனைத்து அறைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது ஒரு அறையில் கழிவறைக்குள் 2 செல்போன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனுடன் 2 சிம்கார்டுகள், ஒரு சார்ஜர் கைப்பற்றப்பட்டன. இவற்றை பதுக்கியதாக சிறை கைதிகள் பார்த்திபன், அழகிரி, கட்டைபிரபு ஆகிய 3 பேர் மீது புகார் கூறப்பட்டது. கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Maduraicentraljail

    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று ஆயுள் தண்டனை கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    மதுரை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதில் 12-வது கட்டமாக மதுரை சிறையில் இருந்து குமரேசன், கருப்பையா, பெருமாள், சுப்பிரமணியன், பிச்சை, கனி ராஜா, பஞ்சராசு, நடேசன், மாதவன் ஆகிய 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுவரை மதுரை மத்திய சிறையில் இருந்து 221 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    மதுரை ஜெயிலில் இருந்து 11 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதனையடுத்து மாநிலம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகள், பல்வேறு கட்டங்களாக நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் முருகன், கணேஷ்பாபு, கருப்பசாமி, பிரபு கண்ணன், ஆனந்தராஜ், ஆண்டிசாமி, சரவணன், ஜெயபால், ராஜா, ராஜசேகரன், பொன்வேல் ஆகிய 11 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

    மதுரை ஜெயிலில் இருந்து இதுவரை 11 கட்டங்களாக 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison

    மதுரை:

    மத்திய சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறைக்குள்ளேயே அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    சென்னை புழல் சிறையில் சொகுசு மெத்தை, பீடி, சிகரெட், செல்போன் போன்றவை கைதிகளுக்கு தாராளமாக கிடைத்துள்ளன. இதனை சில கைதிகள் செல்போனில் படம் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி புழல் சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சிறைக்குள் முறைகேடுகள் நடந்தருப்பது தெரியவந்தது. அங்கிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் போலீசார் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை டி.ஜ.ஜி. பழனி தலைமையில் திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச் செல்வம் கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு மத்திய சிறைக்கு வந்தனர்.

    மத்திய சிறையின் ஒவ்வொரு பிளாக்குகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் பங்கேற்றனர்.

    தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பயங்கரவாதிகள் அறை போன்றவற்றில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின் போது, சிறையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, பீடி, சிகரெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    காலை 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயில் அதிகாரி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். #MaduraiCentralPrison

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenaryfunction

    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்தது.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 7-வது கட்டமாக 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண் கைதியும் ஒருவர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 68 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRcentenaryfunction

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 36 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    மதுரை:

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்து 5 கட்டமாக கைதிகள் விடுவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக 10 பேரும், 2-ம் கட்டமாக 5 பேரும், 3-ம் கட்டமாக 17 பேரும், 4-ம்கட்டமாக 30 பேரும், 5-ம் கட்டமாக 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 6-வது கட்டமாக ராமர், அழகுசாமி என்கிற அழகர்சாமி, முருகன் என்கிற முருகேசன், முத்துசாமி என்கிற முருகன், சுரேஷ், ரமேஷ், கோபால்சாமி, மாசானமுத்து, ஜனநாதன் என்கிற ஜெகதீஷ், பொன்ராஜ், மகாராஜன், அன்பு என்கிற நாகராஜன், வாளக்காபட்டி என்கிற வெள்ளைசாமி, கணேசன், தனுஷ்கோடி, மொக்கராஜ், பழனிசாமி, நாகராஜ், கருப்பன், சஞ்சீவி என்கிற சஞ்சீவிகுமார், சின்னகாமன் உள்பட 36 பேர் இன்று விடுதலையானார்கள்.

    மதுரை மத்திய ஜெயிலில் இருந்து இதுவரை 100 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரையில் மத்திய சிறை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கரிமேடு எம்.கே. புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் ஆதிபரமேஸ்வரன் (வயது20). வழக்கில் கைதாகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.

    கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறிய ஆதிபரமேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அங்குள்ள போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஆதிபரமேஸ்வரன் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தனது கையை கீறிக்கொண்டார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    சிறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாவிட்டால் கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளபோவதாக ஆதிபரமேஸ்வரன் மிரட்டினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி ஆதி பரமேஸ்வரன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை அடுத்த பிராஞ்சேரி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சி (72). வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பேச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 16 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary #TNGovernment
    மதுரை:

    தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்டங்கள்தோறும் கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதன்பேரில் தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 16 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைவாசலில் உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். #MGRCentenary #TNGovernment
    மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நடத்த, விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் அவர் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீது விசாரணை நடத்த, நிர்மலாதேவியை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் நிர்மலாதேவி மீண்டும் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, நிர்மலாதேவிக்கு இம்மாதம் 21-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    அத்துடன் அவரது குரல் மாதிரி பரிசோதனையை, மதுரை மத்திய சிறையில் வைத்து நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார், நிர்மலாதேவியை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×