search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoners released"

    இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மன்னிப்பு அளிக்கப்பட்ட 545 கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். #prisonersreleased #SriLankaNationalDay #SriLankaprisoners
    கொழும்பு:

    பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-2-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை பெற்றது.

    அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியை அந்நாட்டினர்  இலங்கை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், 71-வது தேசிய தினத்தை இலங்கை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.



    தலைநகர் கொழும்புவில் இன்று முப்படையினர் அணிவகுப்புடன் நடைபெற்ற கொண்டாட்டத்தை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

    இந்நிலையில், தேசிய தினத்தையொட்டி சிறு வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, கொழும்பு, கண்டி, அனுராதாப்புரம் ஆகிய சிறைகளில் இருந்து 545 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை சிறைத்துறை ஆணையாளர் உப்புல்டேனியா தெரிவித்துள்ளார். #prisonersreleased #SriLanka #SriLankaNationalDay  #SriLankaprisoners

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 1,457 கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #Releaseofprisoners
    சென்னை:

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.



    இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  #MGRCenturyCeremony  #Releaseofprisoners
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #PrisonersReleased
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

    இதன்படி தமிழகம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து 12 கட்டங்களாக 221 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜலிங்கம், அப்பாஸ் என்கிற சையது அப்பாஸ், ஜோதி, பாண்டியன், ராஜரத்தினம், சாமிக்கண்ணு, பாக்கியம், சந்திரன், முகமது என்கிற அசோக், ஆறுமுகம், அந்தோணி, நாகராஜ், ஜேசுராஜா, வேலுசாமி, முத்து என்கிற நாச்சிமுத்து, ஆரோக்கியசாமி, சேகர்ராஜ், சுப்பையா ஆகிய 18 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதுவரை 239 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony  #PrisonersReleased



    பாளை சிறையில் இருந்து நேற்று காலையில் மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    நெல்லை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 6 கட்டமாக 41 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி மேலும் 44 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் 17-ந் தேதி 23 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 180 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் பாளை சிறையில் இருந்து மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை பாளை மத்திய சிறையில் இருந்து 238 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 9-வது கட்டமாக இன்று காலை மேலும் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 8 கட்டங்களாக மொத்தம் 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 9-வது கட்டமாக இன்று காலை மேலும் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 9 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்த தற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது என்று அரசு முடிவெடுத்துள்ளது.

    அதன்படி ஜெயில் கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இதுவரை 8 கட்டங்களாக கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று 9-வது கட்டமாக 3 பெண்கள் உள்பட 16 பேர் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையான 16 பேரையும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். #MGRCenturyCeremony

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட மேலும் 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 63 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 7வது கட்டமாக இன்று காலை மேலும் 29 ஆண் கைதிகள் மற்றும் 3 பெண் கைதிகள் என 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 32 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்த தற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    அதன்படி, இதுவரை மொத்தம் 95 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். #MGRCenturyCeremony

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenaryfunction

    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்தது.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 7-வது கட்டமாக 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண் கைதியும் ஒருவர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 68 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRcentenaryfunction

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    கோவை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து 2 கட்டமாக 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுபற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கோவை சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வந்தனர். காலை 7 மணிக்கு மேல் 40 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார். 25-ந் தேதி 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 16 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.  #MGRCenturyCeremony



    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதன்படி திருச்சி மத்திய சிறை கைதிகள் 57 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். இதுவரை 6 கட்டமாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 87 ஆயுள் தண்டனை கைதிகள் தமிழக அரசின் உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 57 பேரை விடுதலை செய்யுமாறு சிறைத்துறை உயரதிகாரிகளிடமிருந்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி 57 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக் கையை சிறை நிர்வாகம் மேற்கொண்டது. 

    இதையடுத்து இன்று 57 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதன்மூலம் திருச்சியில் 7 வது கட்டமாக 144 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார்.

    இந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை மொத்தம் 47 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 15 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    சென்னையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அயூப்கான் கூறுகையில்:-

    தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 1500 பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இருவரை 500 பேர் விடுதலை செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேர் தங்களை எப்போது விடுதலை செய்வார்களோ என்ற மனஉளைச்சலில் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் தினமும் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு பிறகு இப்போது தான் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.

    ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.

    ஆண்டுதோறும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் கைதிகள் விடுதலையை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் 8 மாதம் கழித்து தான் தாமதமாக நாங்கள் விடுதலையாகி உள்ளோம் என்றார். #MGRCentenary
    ×