search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Madurai jail"

  உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடும்படி கைதியை தூண்டியதாகவும் போலீஸ் ஏட்டு சின்னசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
  மதுரை:

  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது உசைன் (வயது 29). இவர் சமயநல்லூரில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் முகமது உசேன் கடந்த 27-ந் தேதி காலை 10 மணிக்கு உடல் முழுவதும் பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மதுரை மத்திய ஜெயிலில் கை விலங்கு பூட்டப்பட்டு இருந்த நிலையில், கைதிக்கு பிளேடு கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக ஜெயில் நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது செல்வகுமார் மற்றும் சின்னசாமி ஆகிய 2 பேர் அங்கு பாதுகாவல் பணியில் இருந்தது தெரியவந்தது. எனவே அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஜெயில் கைதி முகம்மது உசைனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

  அப்போது போலீஸ் ஏட்டு சின்னசாமியிடம் கைதி "எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று தெரிவித்து உள்ளார். அப்போது அவரிடம் பிளேடு ஒன்றை கொடுத்த சின்னசாமி, "நான் பணியில் இருக்கும்போது தற்கொலை செய்ய முயற்சிக்க வேண்டாம். எனக்கு பதிலாக செல்வகுமார் என்பவர் பாதுகாவலுக்கு வருவார். அப்போது நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் செல்வகுமார் பணிக்கு வந்து சேர்ந்தார். அப்போது முகமது உசேன் உடம்பை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து ஜெயில் கைதியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும், உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடும்படி கைதியை தூண்டியதாகவும் போலீஸ் ஏட்டு சின்னசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

  மதுரை சிறையில் ஊழல் நடந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  சென்னை:

  சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

  மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள், காகித உறைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

  ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களை லட்சக்கணக்கில் விற்றதாக கணக்கு காட்டி, கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி.களுக்கு தொடர்பு உள்ளது.

  இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

  இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஆயிரக்கணக்கான உறைகள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்றதற்கான ஆதாரங்கள் இல்லாமல், பொது வழக்காக தொடர முடியாது’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

  மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி தணிக்கை அறிக்கையின் மூலமே ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

  மதுரை சிறையில் ஊழல் நடந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  அதன் அடிப்படையில், வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததையடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  இதையும் படியுங்கள்... காங்கிரசில் இருந்து விலகி கீர்த்தி ஆசாத் இன்று மாலை மம்தா கட்சியில் இணைகிறார்

  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்து 18 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony #PrisonersReleased
  மதுரை:

  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

  இதனையொட்டி சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்ய அரசு முடிவெடுத்தது.

  இதன்படி தமிழகம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து 12 கட்டங்களாக 221 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

  இந்த நிலையில் ராஜலிங்கம், அப்பாஸ் என்கிற சையது அப்பாஸ், ஜோதி, பாண்டியன், ராஜரத்தினம், சாமிக்கண்ணு, பாக்கியம், சந்திரன், முகமது என்கிற அசோக், ஆறுமுகம், அந்தோணி, நாகராஜ், ஜேசுராஜா, வேலுசாமி, முத்து என்கிற நாச்சிமுத்து, ஆரோக்கியசாமி, சேகர்ராஜ், சுப்பையா ஆகிய 18 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

  அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதுவரை 239 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். #MGRCenturyCeremony  #PrisonersReleased  மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வாட்ஸ் -அப்பில் வைரலாக பரவி வருகிறது.#RowdyThreat

  மதுரை:

  தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன், பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

  புல்லட் நாகராஜனின் அண்ணன் கடந்த 2006-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

  இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு வாங்கி சாப்பிட்டு வந்தார். கடந்த வாரம் சிறையில் சோதனைக்கு வந்த பெண் டாக்டரிடம், தனக்கு தூக்க மாத்திரைகளை அதிகம் தரும்படி வற்புறுத்தினார். இதற்கு பெண் டாக்டர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், தனது சட்டையை கழற்றி டாக்டரின் முகத்தில் வீசினார்.

  இது குறித்து டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா, விசாரணை நடத்தினார். மேலும் சிறை கமாண்டோக்கள் அவரை தூக்கி வந்து சிறையில் அடைத்தனர்.

  இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புல்லட் நாகராஜனின் அண்ணன், நடத்தை விதி காரணமாக அன்று இரவே விடுதலை செய்யப்பட்டார்.

  வெளியே வந்த அவர், தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த வி‌ஷயத்தை தெரிவித்தார். இதனால் கோபமடைந்த புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் பெண் டாக்டருக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்துத்துள்ளார்.

  ‘கிரேட் ஜெனரல்’ புல்லட் நாகராஜன் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடித்து இருக்கீங்க. மதுரை ஜெயிலை பொறுத்த வரை உங்களுக்கு நிர்வாகத் திறமையே கிடையாது.

  கைதிகளை அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வைத்திருக்கிறீர்களா? உங்களை மாதிரி சிறையில் கைதியை அடித்த ஒரே காரணத்துக்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரித்துக் கொன்றது ஞாபகம் இருக்கிறதா? ஏன் திருந்த மறுக்கிறீர்கள்?

  நாங்க திருந்தி இப்ப பெரிய ஆளா இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்சினை வரட்டும். நீங்கள் என்ன செய்தீர்களோ, அதையே நான் செய்ய வேண்டியது இருக்கும்.

  “ஆறிலும் சாவு, நூறிலும் சாவு”. அதைப்பற்றி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான். உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.

  தலைமை காவலர் கஞ்சா கடத்துகிறார். அவரை வைத்து கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீர்கள். இதற்கு வெட்கமே இல்லையா? இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்கலாமே.

  இவ்வளவு பேசுகிறேன், ஏதாவது செய்து பாருங்கள். உங்களால் முடியாது. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது.

  நீங்கள் எப்படியும் வெளியே வந்து தானே ஆகனும். நான் ஒன்றும் செய்ய மாட்டேன். என் பயலுக ஏதாவது செய்திடு வாங்க. அப்புறம் லாரி உங்க மேல ஏறலாம். பொம்பளையா இருக்கீங்க, திருந்துங்க....

  இவ்வாறு அதில் பேசி உள்ளார்.

  சிறைத்துறை எஸ்.பி.க்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் வைரலாக பரவி வருகிறது. இது சிறைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தலைமறைவாக உள்ள புல்லட் நாகராஜனை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா இந்த மிரட்டல் குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார். #RowdyThreat

  ×