search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - பாளை சிறையில் இருந்து மேலும் 58 கைதிகள் விடுதலை
    X

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - பாளை சிறையில் இருந்து மேலும் 58 கைதிகள் விடுதலை

    பாளை சிறையில் இருந்து நேற்று காலையில் மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    நெல்லை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 6 கட்டமாக 41 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி மேலும் 44 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் 17-ந் தேதி 23 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 180 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் பாளை சிறையில் இருந்து மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை பாளை மத்திய சிறையில் இருந்து 238 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×