search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruparankundam bypoll"

    அ.தி.மு.க.வின் தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் தள்ளிவைத்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Khushboo #ElectionCommission

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பலகட்ட தேர்தல்களை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் மழை அல்ல. அ.தி.மு.க.வால் ஜெயிக்க முடியாது. இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் அந்த கட்சி ஜெயிக்கப்போவதில்லை.

    காரணம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி அல்ல இது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் திணிக்கப்பட்டவர்கள். மக்கனால் அவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனை ரகசியமாக சந்தித்ததை இருவரும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் இருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி இருக்கிறார்கள். ஏன் சந்தித்தார்கள் என்பதை அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.


    அவர்களால் ஒன்றாக பணியாற்றவும் முடியவில்லை. எதையும் எதிர் கொள்ள தைரியம் வேண்டும். எங்காவது, ஏதாவது உதவி கிடைக்குமா? என்று ஒவ்வொருவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நுழைய பார்க்கிறது பா.ஜனதா. நேரடியாக வர முடியா விட்டாலும், பின்வாசல் வழியாக புகுந்துவிட ஆசைப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Khushboo #ElectionCommission

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரியது ஏன்? என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #ElectionCommission #TNgovernment #ADMK

    சென்னை:

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.

    இதேபோல் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். என்பதால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது தமிழகத்தில் மழை காலம் தொடங்குவதாலும், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாலும் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்கக்கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், டிசம்பர் மாதங்களில் தீவிரமாக பெய்யும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

     


    அதில் இயல்பை காட்டிலும் பருவ மழை அதிக அளவில் பெய்யும் என்றும் சராசரி அளவைவிட 112 சதவீதம் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக பருவ மழை காலங்களில் வழக்கத்தைவிட பெருமழை பெய்து வருகிறது.

    திருவாரூர் தொகுதி காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. பருவ மழை காலத்தில் இங்கு பலத்த மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அரசு எந்திரங்கள் மழை நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே இந்த கால கட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தினால் தேர்தல் பணியாற்றுவது அரசு அதிகாரிகளுக்கு இயலாததாக இருக்கும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகையிட்டது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தினால் அது ஐகோர்ட்டு அதிகாரத்தை மீறிய செயலாகும். எனவே வழக்கு முடிவுக்கு வரும்வரை இங்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு தலைமைச் செயலாளர் கடிதத்தில் கூறியுள்ளார். #ElectionCommission  #TNgovernment #ADMK

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு காரணமாக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாமல் போய்விட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju

    மதுரை:

    வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமல் போய் இருக்கும்.


    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது அவதூறு பேச்சுகளை நிறுத்தி இருப்பார். மழை காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி தள்ளிவைப்பு அறிவிப்பு மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். #ElectionCommission #MinsiterUdhayaKumar

    மதுரை:

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

     


    எனவே மழை நேரத்தில் அரசு எந்திரங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது. அதை கருத்தில் கொண்டுதான் மழை நேரத்தில் தேர்தல் வேண் டாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

    எனவே மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தள்ளிவைப்புக்கு பலர் பல காரணங்களை திரித்து கூறுவார்கள். அதையெல்லாம் கருத்தில் கொண்டால் மக்கள் நலன் காக்க முடியாமல போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterUdhayaKumar

    ×