என் மலர்
செய்திகள்

திருப்பரங்குன்றம் தேர்தல் தள்ளிவைப்பு: மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியவில்லை - செல்லூர் ராஜூ
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு காரணமாக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாமல் போய்விட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju
மதுரை:
வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகள் இல்லாமல் போய் இருக்கும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது அவதூறு பேச்சுகளை நிறுத்தி இருப்பார். மழை காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterSellurRaju
Next Story






