search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Militants"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் இன்று நடைபெற்ற மீலாது நபி விழா கொண்டாட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். #40Killed #KabulBlast #ProphetMohammadbirthday
    காபுல்:

    இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முஹம்மது நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாது நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாது நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாது நபி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.



    (உள்ளூர் நேரப்படி) இன்று மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்கொலைப்படை கைவரிசையாக கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. #40Killed #KabulBlast #ProphetMohammadbirthday
    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 2 பேரை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் 3-வது வாலிபரை பயங்கரவாதிகள் இன்று கடத்தி சென்றனர். #militants

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

    இதில் 2 பேரை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர். 2 பேரை விட்டுவிட்டனர். ஒருவரை காணவில்லை. போலீசுக்கு தகவல் கொடுத்ததால் 2 இளைஞர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர். 17 வயதான பள்ளி மாணவனை அவர்கள் துபாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    அதை தொடர்ந்து 19 வயதான நதிம் மன்சூர் தர் என்ற இளைஞரை கழுத்தை அறுத்துக்கொன்றனர். அவரது உடல் சோபியான் பகுதியில் கிடந்தது. இந்த இரண்டு சம்பவமும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது வாலிபரை பயங்கரவாதிகள் இன்று கடத்தி சென்றனர். அந்த வாலிபரின் பெயர் சுகைல் அகமது.

    தெற்கு காஷ்மீரில் உள்ள கிராமத்தில் இருந்தபோது அவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 3-வது கடத்தல் சம்பவம் இதுவாகும்.

    இந்தநிலையில் காஷ்மீரில் இன்று 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

    சோபியான் மாவட்டம் ஜெய்ன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் அல்-பாதர் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவார்கள். #militants

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:


    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜைனாப்போரா பகுதியை அடுத்துள்ள ரெப்பான் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 



    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட சோபியான் மாவட்டத்தை சேர்ந்த நவாஸ் வாகேய், மற்றவர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த யாவார் வானி இருவருமே அல்-பதர் என்னும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Twomilitantskilled #JKencounter
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றனர். #KupwaraEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.
    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #KupwaraEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. #JammuKashmir #Encounter
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி அளித்து வருகின்றனர்.

    அதேநேரத்தில் மழைக்காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்கின்றனர். ஐம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் அருகே சாகூ அரிசால் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.



    இந்த துப்பாக்கிச்சூடு குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #JammuKashmir #Encounter

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று மாலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, பதான் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

    பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். #JKInfiltration #Militantskilled

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பதேவ்காடல் பகுதியில் நேற்று முன்தினம் லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார்.

    இந்தநிலையில் இன்று எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

    காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி செக்டார் எல்லையில் போனியர் என்ற பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டவாறே உள்ளே நுழைய முயன்றனர்.

    பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களது ஊடுருவலை முறியடித்தனர். 3 பயங்கரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரிய வில்லை. #JKInfiltration  #Militantskilled

    ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பதுங்கியுள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்தார். #JammuKashmir #Militants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்துக்கு ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் ஏ.கே.பட் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பதுங்கியுள்ளனர்.



    பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்த ராணுவம் விழிப்புடன் இருக்கிறது. ராணுவத்தினரின் முயற்சிகளுக்கு எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். காஷ்மீரில் முற்றிலுமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த விரும்புகிறோம்.

    ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து பகுதிவாரியாக பயிற்சி ஒத்திகை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #Militants
    மேற்கு தொடர்ச்சி மலையில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrishnan #Militants

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது-

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி நமது ராணுவம் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் முறையில் போர் தொடுத்ததில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக அளவில் நிரூபித்துள்ளோம்.

    இதே நாளில் ராணுவத்தினருக்கு நாம் மரியாதை செலுத்துவது நமது கடமை.

    கேரளா, கர்நாடகா பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இவர்களுக்கு பின் புலத்தில் இருந்து கொண்டு பண உதவி செய்ய சிலர் தயாராக உள்ளனர். பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

     


    மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் தோறும் குழு அமைக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் பசுந் தேயிலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

    தேயிலைக்கு விலை கிடைக்க பாரதிய ஜனதா அரசு பாடுபடும்.

    இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

    கோத்தகிரி செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் வந்த பொன் . ராதாகிருஷ்ணன் அங்குள்ள ரெயில் நிலையம் எதிரில் தேங்கி கிடந்த குப்பைகளை வேட்டியை மடித்து கட்டி கொண்டு அகற்றினார்.அப்போது அவர் கூறும் போது, ரெயில் நிலையம் எதிரே குப்பைகள் அகற்றப்படதாதது குறித்து ரெயில்வே மேலாளர் சார்பில் நகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் நகராட்சி நிர்வாகம் இதற்கு செவி சாய்க்காததால் ரெயில்வே துறை சார்பில் நகராட்சிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக கூறுகின்றனர்.

    இது போன்று அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #BJP #PonRadhakrishnan #Militants

    ஈராக்கின் பிரபல மாடல் அழகியை பாக்தாத்தில் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TaraFares
    பாக்தாத்:

    ஈராக்கின் பிரபல இளம் மாடல் அழகி தாரா பாரஸ் (22), இவரது உடை மற்றும் பல வண்ண சிகை அலங்காரம் கையில் பச்சை குத்திய விதம் பலரை கவர்ந்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 28 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர்.

    இவரது அழகு, திறமை மற்றும் வாழ்க்கை முறை ஈராக் மக்களை பெரிதும் கவர்ந்தது. எனவே லட்சக்கணக்கானோர் அவரது ரசிகர்களாக திகழ்ந்தனர். ஆனால் இவரது ஸ்டைலான வாழ்க்கை முறை தீவிரவாதிகளுக்கு பிடிக்க வில்லை. கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

    இவரது சொந்த ஊர் பாக்தாத். ஆனால் அங்கு வசிக்காமல் குர்திஸ்தானில் தங்கியிருந்தார். எப்போதாவது தான் பாக்தாத் செல்வார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்தாத் சென்று இருந்தார்.

    அப்போது அவரை சில தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். அதில் 3 குண்டுகள் அவரது உடலில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவற்றை பதிவு செய்துள்ளனர். #TaraFares
    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அரசு உதவியுடன் முகாம் அமைத்துள்ள பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

    பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து நாசவேலை சம்பவங்களில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படை மீது பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். இதில் 19 வீரர்கள் பலியானார்கள்.

    இதற்கு அந்த மாத இறுதியிலேயே இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் அட்டாக்) நடத்தி பதிலடி கொடுத்து எல்லையை ஒட்டி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதில் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் முகாம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதிதாக 8 பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய படை துல்லியமாக தாக்குதல் நடத்திய லிபா பள்ளத்தாக்கில் மீண்டும் பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் லிபா, சகோதி, பராக் கோட், ‌ஷர்டி, ஜுரா ஆகிய பகுதிகளிலும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பராக்கோட் மற்றும் கதுவா அருகே உள்ள பகுதிகளிலும் முகாம்கள் அமைத்துள்ளனர்.

    இந்த முகாம்களில் உள்ள 230 பயங்கரவாதிகள் எல்லை கோட்டு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. 27 இடங்கள் வழியாக அவர்கள் ஊடுருவ இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    கடந்த ஒரு மாதமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்து விதமான பயிற்சிகளையும் பெற்ற அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்த மாதம் 18-ந்தேதி பதவியேற்றார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிவிட்டு மறுபுறம் தீவிரவாததத்தை தூண்டி வருகிறார். கடந்த வாரம் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 3 போலீசாரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா கடைசி நேரத்தில் ரத்து செய்தது.

    இதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது ராணுவத்தின் ஆலோசனைப்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஹாஜிபூர், கதுவா பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பு படைகளை அதிகரித்துள்ளது.  #JammuKashmir #Pakistan
    அரியானாவில் உள்ள 8 ரெயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று லஷ்கர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். #bombthreat #Railwaystation

    அம்பாலா:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தப் போவதாக அடிக்கடி மிரட்டியபடி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் எழுதியதாக கூறப்படும் மர்ம கடிதம் ஒன்று அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.

    அதில், “கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் அக்டோபர் 20-ந்தேதி குண்டுகள் வைத்து தகர்ப்போம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதே தினத்தன்று சகரன்பூர், ஜாக்கல், கிஷார், கர்னல், ரோதக், பானிப்பட், ஜெகத்ரீ ஆகிய ரெயில் நிலையங்களையும் தகர்க்கப் போவதாக கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

    லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து இந்த கடிதத்தை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே அரியானாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #bombthreat #Railwaystation

    ×