search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவுத்துறை"

    • பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
    • ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பதி:

    பிரதமர் மோடி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.

    விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி திருமலைக்கு வருகிறார். திருமலையில் உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து ரேணிகுண்டா விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார், மதிய பாதுகாப்பு படை போலீசார் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    மேலும் பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

    ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையல் ஆந்திர மாநிலம், விஜயவாடா, பொரங்கியை சேர்ந்தவர் கிருபாகர். இவர் மத்திய உளவுத்துறை பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பியாக வேலை செய்து வந்தார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்ற போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கிளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

    இதில், ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கி ளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் காய மடைந்த மீனவர் பிராங்கிளி னிடம் உளவுத்துறை போலீ சார் விசாரணை நடத்தினர். அவரிடம் இந்திய கடல் பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி யதா? அல்லது இலங்கை கடல் பகுதியில் நடை பெற்றதா? என விசாரணை மேற்கொண்டனர்.

    • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

    சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

    3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

    குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட அவரை கொல்ல முயற்சி நடந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக ஆவணங்கள், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவின் (எப்.பி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இதில் ராணி எலிசபெத்தின் அமெரிக்க பயணம் தொடர்பாக சேமிக்கப்பட்ட கோப்புகள் வெளியிட்டு உள்ளது. 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    அதற்கு முன்பாக சான்பிரான்சிஸ்கோ போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், வடக்கு அயர்லாந்தில் தனது மகள் ரப்பர் புல்லட்டால் கொல்லப்பட்டதாகவும் அதற்காக ராணி எலிசபெத் படகில் செல்லும் போது கோல்டன் கேட் பாலத்தில் இருந்து ஒரு பொருளை வீசி ராணிக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பேன் அல்லது யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அவர் வரும் போது கொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ராணி எலிசபெத் படகு அருகில் வரும் போது பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு உளவுத்துறையால் உத்தேசிக்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    யோசெமிட்டி தேசிய பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சொல்லப்படவில்லை.

    மேலும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    • கேரள மாநிலத்தில் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கேரள பெண்களை மையமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.

    இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாநில உளவுதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அந்த படத்தை திரையிடாமல் இருந்தால் நல்லது. இந்த படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் மனுவும் அளித்து உள்ளனர். இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே வருகிற 5-ந்தேதி படம் வெளியாகிறதா என்பது பற்றி திரைத்துறையினரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். அதே நேரத்தில் மற்ற மொழிகளில் படம் வெளியாவதை பார்த்து எந்த மாதிரி சூழல் நிலவுகிறது என்பதையும் பார்த்து பின்னர் முடிவு எடுக்கலாம்.

    இவ்வாறு உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .

    இதற்கிடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட யாரும் இதுவரை முன்வரவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் படத்தை தயாரிப்பாளரே வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த படத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான திரைப்படங்கள் பொய்யையும், அவதூறையும் கலந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மத மோதலை உருவாக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
    • ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 110 ஏக்கரில் சுமார் ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி இதற்காக அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 50 சதவீத வேலைகள் முடிந்து விட்டது.

    அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மகரசங்கராந்தியின் போது கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

    கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாகவும் அவர்கள் ராமர் கோவிலை தற்கொலை படை தாக்குதல் மூலம் தகர்க்க சதி செய்து உள்ளதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கோவிலை சுற்றிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அயோத்தியில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
    • தலைமை பொறுப்பில் உள்ள 4 நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து இந்த 2 மாநிலங்களிலும் இந்து இயக்க தலைவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேரின் பெயர் பட்டியலை கொடுத்து அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவு பிரிவினர் எச்சரித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த தலைவர்களுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.)யை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் 5 தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பார்கள். 2 அல்லது 3 கமாண்டோ பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் தலைமை பொறுப்பில் உள்ள 4 நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போன்று இந்து இயக்கங்களில் தீவிரமாக செயலாற்றி வரும் முன்னணி நிர்வாகிகளும் வெளியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் வெளியில் செல்லும் போது தங்களது பாதுகாப்பு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் வேகமாக செயல்படும் இந்து இயக்க நிர்வாகிகள் யார்-யார் என்பதை கண்டறிந்து அவர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உளவு பிரிவு போலீசார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகம், கேரளா உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகம், கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்த நிலையிலும், போலீசார் அதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு கோர்ட்டு அவமதிப்பு மனு, போலீசார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு ஆகியவற்றை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த அறிவுறுத்தியுள்ளது.

    இந்த ஊர்வலத்துக்கு வருகிற 31-ந்தேதிக்குள் தமிழக காவல்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கேரளாவில் 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருப்பதுடன் தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உஷாராக இருக்க அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறும் வரை போலீசார் உஷாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×