என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதிஷ்"

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின.
    • இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.

    2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வுக்கும் இஸ்ரேலின் மொசாத்-திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்பியான குமார் கேத்கர் பிரபல பத்திரிகையாளரும் ஆவார்.

    இந்நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "2004 மக்களவை தேர்தலில் கட்சி 145 இடங்களையும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்திருந்தால், காங்கிரசால் 250 இடங்களைப் பெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், 2014-ல் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.

    காங்கிரசைப் பலவீனப்படுத்த 2014 தேர்தலுக்கு முன்பே சதி வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2009-ல் கிடைத்த இடங்களைவிடக் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைய சில அமைப்புகள் தலையிட்டன.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த நிறுவனங்கள் நம்பின. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க சி.ஐ.ஏ-வும் மொசாத்தும் முடிவு செய்தன.

    இந்த அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.

    மத்தியில் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின" என்று தெரிவித்தார்.  

    • குற்றம் கடிதல் படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார்.

    தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார். இதன் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாகின்றன. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு பெறும் முன் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கும் கதையே இப்படத்தின் மையமாகும்.

    இப்படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், சந்தினி தமிழரசன், வீஜி சந்திரசேகர், ஜோவிதா, ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை எஸ்.கே. ஜீவா & ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். படத்தின் இசையை டிகே மேற்கொள்கிறார்.

    தொழில்நுட்ப விவரங்கள்

    ஒளிப்பதிவு: சதீஷ்.ஜி

    எடிட்டிங்: சி.எஸ். பிரேம் குமார்

    ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ

    நிர்வாக தயாரிப்பாளர்: பி. ஆறுமுகம்

    • யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த காலத்தில் பலரும் யூடியூப் , இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ் மற்றும் Influencers பலரும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தற்பொழுது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இவர் , மனைவி தீபா மற்றும் இவருடைய அம்மா என குடும்பமாக சேர்ந்து செய்யும் லூட்டி வீடியோஸ், கணவன் மனைவி இடையே நடக்கும் பரிதாபங்கள் வீடியோ என இவர்களின் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளது மேலும் இவர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

    இவர் தற்பொழுது டாட்டூ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை வேனு தேவராஜ் எழுதி இயக்கியுள்ளார். படத்தை ரென்சு மற்றும் சஞ்சு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படமே இந்தியாவில் முதல் ஏஐ இன்வஸ்டிகேஷன் திரில்லராக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பூஜையில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றி வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.

     


    மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது, இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ஆசீர்வாதத்துடன் படத்தை தொடங்குகிறோம் என்று விஜய்யுடன் சதிஷ் மற்றும் படக்குழு இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.


    வித்தைக்காரன்

    வித்தைக்காரன்

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வித்தைக்காரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    ×