என் மலர்
சினிமா செய்திகள்
குற்றம் கடிதல் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!
- குற்றம் கடிதல் படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார்.
தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார். இதன் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாகின்றன. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு பெறும் முன் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கும் கதையே இப்படத்தின் மையமாகும்.
இப்படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், சந்தினி தமிழரசன், வீஜி சந்திரசேகர், ஜோவிதா, ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை எஸ்.கே. ஜீவா & ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார் இணைந்து இயக்கியுள்ளனர். படத்தின் இசையை டிகே மேற்கொள்கிறார்.
தொழில்நுட்ப விவரங்கள்
ஒளிப்பதிவு: சதீஷ்.ஜி
எடிட்டிங்: சி.எஸ். பிரேம் குமார்
ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ
நிர்வாக தயாரிப்பாளர்: பி. ஆறுமுகம்







