search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mask"

    • அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
    • தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், முக கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். மேலும் முக கவசம் அணியாவிட்டால் 500 ருபாய் அபராதம் விதிப்பது தவறு என்றும், 500 ரூபாய் என்பது குறைந்த தொகை அல்ல என்றும் கூறிய அவர், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், போதிய ஆய்வுகள் எதுவும் இன்றி உரிய ஆவணங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் உள்ள மருந்து கடைகளில் தற்போது முக கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
    • சென்னையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது அரசின் விதிமுறைகள் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று 2-வது அலையின் போது முக கவசங்கள் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து அப்போது முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வதை தடுக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. என்95 முக கவசத்தின் விலை ரூ.22 ஆகவும், 2 அடுக்கு அறுவை சிகிச்சை முக கவசத்தின் விலை ரூ.3 ஆகவும், 3 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.4 ஆகவும் அரசு நிர்ணயித்தது.

    அதேபோல் 200 மி.லி கிருமி நாசினியின் விலை ரூ.110, ஒரு ஜோடி கையுறைகள் ரூ.11, பிபீ கிட் விலை ரூ.273 என அரசு நிர்ணயித்தது. இந்த விலையை விட கூடுதல் விலைக்கு இவற்றை விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள மருந்து கடைகளில் தற்போது முக கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. சென்னையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது அரசின் விதிமுறைகள் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை.

    அங்கு ரூ.3 மற்றும் ரூ.4 மதிப்புள்ள முக கவசங்கள் வைத்திருந்தாலும் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்காமல் மற்ற முக கவசங்களை ரூ.150 மற்றும் ரூ.200-க்கு விற்றனர். தரமான முக கவசங்கள் ரூ.200-க்கு தான் கிடைக்கும் என்று கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மருந்து கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'கொரோனா தொற்று 2-வது அலையின் போது மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் இருந்தன. அதன்பிறகு உற்பத்தியாளர்களே சில்லரை விலையை உயர்த்திவிட்டனர்.

    எனவே கையுறைகள் மற்றும் என்95 முக கவசங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க முடியவில்லை' என்றனர்.

    இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு சில மருந்து கடைகளில் முக கவசம் ரூ.250 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக கவசங்கள், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

    • தமிழக அரசின் உத்தரவின்படி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
    • பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும்.

    தமிழக அரசின் உத்தரவின்படி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசமின்றி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கவோ பொருட்கள் வழங்கவோ கூடாது.

    கடைகளின் நுழைவு வாயிலில் கட்டாயம் கிருமி நாசினி அல்லது சோப்பு வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதனை கட்டாயம் பயன்–படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்கள் சுமார் 6 அடி சமூக இடைவெளியை கடை–பிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

    பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நகராட்சி அதிகாரிகளின் ஆய்வின்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
    • இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    நெல்லை:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

    இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைதேடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்ளது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

    வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம்.

    மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    • கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எனவே பொதுமக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    • இதற்கிடையே சென்னையிலும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    பொது இடங்களில் கூடும்போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    இதன்படி தமிழகம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி துறை மற்றும் போலீசார் இணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தீவிர வேட்டையால் பொது இடங்களில் மாஸ்க் அணியும் பழக்கம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. அதேநேரத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதன்படி தமிழக முழுவதும் ஒரேநாளில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எனவே பொதுமக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே சென்னையிலும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இதன்படி நேற்று ஒரேநாளில் மாஸ்க் அணியாத 121 பேரிடம் அபராதமாக ரூ.60 ஆயிரத்து 500 வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முக கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 121 நபர்களிடம் இருந்து ரூ.60,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.2 ஆயிரம், மணலியில் ரூ.3 ஆயிரம், மாதவரத்தில் ரூ.2 ஆயிரம், தண்டையார்பேட்டையில் ரூ.9 ஆயிரத்து 500, ராயபுரத்தில் ரூ.6 ஆயிரத்து 500, திரு.வி.க.நகரில் ரூ. ஆயிரத்து 500, அம்பத்தூரில் ரூ.4 ஆயிரத்து 500, அண்ணாநகரில் ரூ.4 ஆயிரம்,

    தேனாம்பேட்டையில் ரூ.3 ஆயிரம், கோடம்பாக்கத்தில் ரூ.9 ஆயிரத்து 500, வளசரவாக்கத்தில் ரூ.3 ஆயிரம், ஆலந்தூரில் ரூ.2 ஆயிரம், அடையாரில் ரூ.7 ஆயிரம், பெருங்குடியில் ரூ.1000, சோழிங்கநல்லூரில் ரூ2 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சென்னை மாநகரங்களில் முக கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தடுக்கப்படும்.

    சென்னையில் கோவில்களில் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாஸ்க் அணிந்து மக்கள் செல்லத் தொடங்கி உள்ளனர்.

    கோவில்களில் நுழையும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என்று அங்குள்ள பணியாளர்கள் கூறியதும் பையில் இருக்கும் மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டு மக்கள் உள்ளே செல்கிறார்கள். இதேபோன்று திருமணம் போன்ற விழாக்களிலும் கடந்த சில நாட்களில் முக கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளது.

    • மெட்ரோ ரெயிலில் பயணிப்போர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • கொரோனாவைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியது சென்னை மாநகராட்சி.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று (ஜூலை 7) முதல் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்வோரும் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
    • முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்துகிறது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்தி இன்று மாலை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இது–வரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிம், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது
    • கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 3 பேருக்கு புதியதாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 259900 பேர்களில் இதுவரை 271415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிம், 277268 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18-45வயதிற்குட்பட்ட 342100 நபர்களில் இதுவரை 349213 நபர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 344444 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 15-18 வயதிற்கு உட்பட்ட 34800 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 35116 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 30807 நபருக்கும் போடப்பட்டுள்ளது. 12-14 வயதிற்கு உட்பட்ட 22100 நபர்களில் முதல் தவணை தடுப்பூசி 24563 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி 17702 நபருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 658900 நபர்களில் 680307 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 670221 இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளது.

    கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

    இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

    எனவே, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

    இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.
    • பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலிய மங்கல ம்அருகே உள்ள களஞ்சே ரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42).

    இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலைய த்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொர நாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது இன்று காலை கருப்பூர் புறவழி ச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியது.

    இதில் சம்பவ இடத்திலேயே புண்ணிய மூர்த்தி உயிரி ழந்தார்.தகவல யறிந்த உடனடியாக சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணி ப்பாளர்அசோ கன் மற்றும் தாலு கா காவல் நிலைய காவல்துறை யினர் புண்ணி யமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்ப கோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இப்படு கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல்து றையினர் தீவிர விசாரணை மே ற்கொண்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் முக கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அதிரடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    'மாஸ்க்' அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும், மதுவாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது, இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மேலாளர்களும், ஊழியர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த 2 வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பொது இடங்களில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ- மாணவிகள், மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி ஈரோடு ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது. மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம், டவுன் டி.என். பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது

    இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

    ×