search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாஸ்க் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'மாஸ்க்' அணியாவிட்டால் மதுபானம் கிடையாது- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு

    • டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் முக கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அதிரடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    'மாஸ்க்' அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும், மதுவாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது, இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் டாஸ்மாக் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்திருப்பதுடன் அவர்கள் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மேலாளர்களும், ஊழியர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×