நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் 22-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் 22-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

நெல்லை:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைதேடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்ளது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம்.

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com