search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mask"

    • தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது.
    • கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவை,

    தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினமும் 15 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது. கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாவட்டத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகம், தியேட்டர், பஸ்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனால், கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

    காரைக்கால்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனை டீன் நோயாளி, உடன் வந்தவர்களுக்கு அறிவுறுத்தல்

    அரியலூர்,

    நாட்டில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் டாக்டர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் உடன் வந்தவர்களில் பலர் முக கவசம் அணிந்து வந்தனர். சிலர் முக கவசம் அணியவில்லை. கட்டாயம் முககவசம் அணிந்தால் மட்டுமே நோய் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனையின் டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
    • முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    இதனை வரவேற்கிறோம். 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு அதிகளவில் பக்தர்கள், கூற்றுலுா பயணிகள் வருவர். இவர்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக வேளாங்கண்ணியில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன்தலைமையில் நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சி, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் தன்னார்வளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
    • சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    சென்னை:

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது.

    தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

    பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் ஆஸ்பத்திரிகளில் இருந்தே பரவும். எனவே தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் நாளை முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகள், உள் நோயாளிகள் மருத்துவமனையின் அனைத்து நிலை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இன்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனோ தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

    • மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதையொட்டி மக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிய வேண்டும்.
    • கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவருடன் விமானத்தில் பயணித்த மேலும் 70 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ஏதும் இல்லை. மக்கள் சுய பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும். பொது மக்கள் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த 70 பேருக்கும் சுகாதாரதுறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரையை அடுத்த விருதுநகரை சேர்ந்த தாய்-மகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதையொட்டி 2 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். புதியவகை கொரோனா தொற்று இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
    • புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    புதுச்சேரி:

    பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    பொது இடங்கள், கடற்கரை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முக கவம் அணிய வேண்டும்.

    புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை.

    அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
    • பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    • இந்தியாவில் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • நகர்மன்ற தலைவர் சாதிர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.

    தென்காசி:

    இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடாமல் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் முக கவசத்தை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் கே. என்.எல். சுப்பையா ஆகியோர் இணைந்து நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை முக கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • பயணிகள் மட்டுமின்றி ஊழியர்களும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

    சென்னை:

    சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா பி.எப்.-7 வேகமாக பரவி வருவதால் மற்ற நாடுகள் அனைத்தும் உஷாராக தொடங்கி உள்ளது. ஆனாலும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் கொரோனா பி.எப்.-7 நுழைந்து விட்டது.

    இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத், ஆந்திரா மாநிலங்களில் உருமாறிய கொரோனா வந்து விட்டதால் இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

    இது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    இந்த நிலையில் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நாளை முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகளை கேசரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, விமான நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல் படி இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை போன்று இப்போதும் பரிசோதனைகள் தொடர உள்ளது.

    இதையொட்டி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை முக கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அதன் பேரில் பயணிகள் மட்டுமின்றி ஊழியர்களும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

    இதேபோல் ரெயில்களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் முக கவசம் விற்பனை கடைகளில் மீண்டும் விறுவிறுப்படைந்து உள்ளது.

    • நெல்லை முன்னீர் பள்ளத்தை அடுத்த தருவையை சேர்ந்தவர் பால் மாரியப்பன் ( வயது 35)
    • அவரை தாக்கிய மர்ம நபர்கள் பால் மாரியப்பனிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அவரை அடித்து விரட்டினர்.

    நெல்லை:

    நெல்லை முன்னீர் பள்ளத்தை அடுத்த தருவையை சேர்ந்தவர் பால் மாரியப்பன் ( வயது 35). இவர் டவுன் காய்கறி மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    முகமூடி கும்பல்

    நேற்று இரவு வேலை முடிந்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மருதம்நகர்- ஆரைக்குளம் அருகே சென்றபோது அங்குள்ள மேம்பாலம் அருகே முகமூடி அணிந்திருந்த 2 பேர் பால் மாரியப்பனை வழி மறித்தனர். திடீரென அவரை தாக்கிய மர்ம நபர்கள் பால் மாரியப்பனிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அவரை அடித்து விரட்டினர்.

    போலீசில் புகார்

    இதுகுறித்து பால்மாரி யப்பன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பால் மாரியப்பனின் மோட்டார் சைக்கிள் கிடந்தது. அதனை போலீசார் மீட்டு பால் மாரியப்பனிடம் ஒப்படைத்தனர். மேலும் முகமூடி அணிந்து வந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு முன்னீர்பள்ளம் பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் பழுதடைந்தது. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனை மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கைவரிசை காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறு கின்றனர்.

    ×