search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோயில்"

    • பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

    பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    • திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
    • கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் இலவச தரிசன நேர டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நாளை அதிகாலை முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில் நேற்று பகல் 1.30 மணி அளவில் முன்கூட்டியே சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 4 நாட்களுக்கான 2 லட்சம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.

    தினமும் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் 11-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அந்தந்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருவதால் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே அன்றைய தரிசனம் டிக்கெட்டுகள் முன்கூட்டியே வழங்குவதை நிறுத்தி அன்றே வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 78,460 பேர் தரிசனம் செய்தனர். 29,182 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.03 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    • வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
    • பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

    ×