search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே நள்ளிரவில் டிரைவரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்த முகமூடி கொள்ளையர்கள்- போலீசார் விசாரணை
    X

    நெல்லை அருகே நள்ளிரவில் டிரைவரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்த முகமூடி கொள்ளையர்கள்- போலீசார் விசாரணை

    • நெல்லை முன்னீர் பள்ளத்தை அடுத்த தருவையை சேர்ந்தவர் பால் மாரியப்பன் ( வயது 35)
    • அவரை தாக்கிய மர்ம நபர்கள் பால் மாரியப்பனிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அவரை அடித்து விரட்டினர்.

    நெல்லை:

    நெல்லை முன்னீர் பள்ளத்தை அடுத்த தருவையை சேர்ந்தவர் பால் மாரியப்பன் ( வயது 35). இவர் டவுன் காய்கறி மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    முகமூடி கும்பல்

    நேற்று இரவு வேலை முடிந்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மருதம்நகர்- ஆரைக்குளம் அருகே சென்றபோது அங்குள்ள மேம்பாலம் அருகே முகமூடி அணிந்திருந்த 2 பேர் பால் மாரியப்பனை வழி மறித்தனர். திடீரென அவரை தாக்கிய மர்ம நபர்கள் பால் மாரியப்பனிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அவரை அடித்து விரட்டினர்.

    போலீசில் புகார்

    இதுகுறித்து பால்மாரி யப்பன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பால் மாரியப்பனின் மோட்டார் சைக்கிள் கிடந்தது. அதனை போலீசார் மீட்டு பால் மாரியப்பனிடம் ஒப்படைத்தனர். மேலும் முகமூடி அணிந்து வந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு முன்னீர்பள்ளம் பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் பழுதடைந்தது. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனை மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கைவரிசை காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறு கின்றனர்.

    Next Story
    ×