search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமூடி"

    • வீடு புகுந்து தொழிலதிபரை வெட்டினர்.
    • முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் கே.கே. நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    முகமூடி கொள்ளையர்கள்

    கடந்த மாதம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் செல்வராஜ் கொள்ளையர்களை பார்த்தவுடன் கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு கூடினர். இதை கண்ட கொள்ளையர்கள் அங்கி ருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2-வது முறையாக அப்பகுதிக்கு இரவு காரில் வந்த கொள்ளை யர்கள் காளையார் கோயில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் வேலை பார்க்கும் காமராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்.

    அரிவாள் வெட்டு

    மேலும் தொழிலதிபர் செல்வராஜ் வீட்டுக்குள் மீண்டும் புகுந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தொழிலதிபர் செல்வராஜ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் செய்தார். ஆனால் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

    பொது மக்கள் அச்சம்

    மேலும் இரவில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய முகமூடி கொள்ளை கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடி நடவடிக்கை எடுத்து முகமூடி கொள்ளை யர்களை பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.

    • 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோ ருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
    • ஆடிட்டர் விக்னேஷ் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பொது மக்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னத்திருப்பதி சந்திரன் கார்டன் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஆடிட்டர். இவர் கடந்த 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோ ருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    இந்த நிலையில் ஆடிட்டர் விக்னேஷ் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பொது மக்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்தால் மட்டுமே என்னென்ன பொருட்கள் திருட்டு போனது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகமூடி அணிந்து சென்றது தெரியவந்தது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.
    • பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலிய மங்கல ம்அருகே உள்ள களஞ்சே ரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42).

    இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலைய த்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொர நாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது இன்று காலை கருப்பூர் புறவழி ச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியது.

    இதில் சம்பவ இடத்திலேயே புண்ணிய மூர்த்தி உயிரி ழந்தார்.தகவல யறிந்த உடனடியாக சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணி ப்பாளர்அசோ கன் மற்றும் தாலு கா காவல் நிலைய காவல்துறை யினர் புண்ணி யமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்ப கோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இப்படு கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல்து றையினர் தீவிர விசாரணை மே ற்கொண்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கொடூர ஆயுதங்களுடன் இரவில் திரியும் முகமூடி கொள்ளையர்கள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோண பைப் குடியிருப்பு, பூலாம்பட்டி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் முகமூடி அணிந்து இரவு நேரங்களில் சுற்றித் திரிவதாக புகார் எழுந்தது, இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி -பூலாம்பட்டி பிரதான சாலையில் உள்ள கோணபைப் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள குடியிருப்புகளில் அடையாளம் தெரியாத சில நபர்கள் முகமூடி அணிந்து சுற்றித் திரிந்தனர்.

    குடியிருப்புகளில் நுழைய முயன்ற அவர்களை அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்து விரட்டியதால், அவர்கள் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் கையில் வீச்சரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளை சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர் மேலும் எடப்பாடி நகரம் முழுவதும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் எனவும், எடப்பாடி பூலாம்பட்டி சாலையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×