search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai"

    • துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல்.
    • தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் தாக்குதல் நடத்தினர்.

    தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • கருமாத்தூர் புனித கிளாரட் பள்ளியில் சமூக நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
    • பல்சமய உரையாடல் குழு ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் 'சமூக நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கினார். செல்வமணி, உதவி தலைமை ஆசிரியர் ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்சமய உரையாடல் குழு ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

    இறைவன் படைப்பில் நாம் அனைவரும் சமம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி நல்லிணக்க நாள் குறித்து தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் பேசினார்.

    பல்சமய உரையாடல் குழு மாணவிகள் தனுஸ்ரீ, வித்யா, மோனிகா, பிரீத்தி ஆகியோர் கலந்துரையாடல் வழியாக சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள் நடனம் மூலம் தேசிய ஒருமைப்பாடு பற்றி விளக்கினர். முடிவில் ஆசிரியர் அற்புதம் நன்றி கூறினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தமிழ் ெசல்வம், சுஜேந்திரன், ஜெயசீலன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    • மதுரையில் எஸ்.பி.ஐ. கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் எஸ்.டிபி.ஐ. கட்சி சார்பில் ஜன.7-ந் தேதி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது, இதை முன்னிட்டு கோரிப்பா ளையம் பகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் தலைமை தாங்கி னார்.

    மாநில பொதுச் செயலா ளர் நஸ்ரூதீன், செயலாளர் நஜ்மா பேகம், செயற்குழு உறுப்பினர்ஷபீக் அகமது, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார், உமன்ஸ் இந்தியா மூவ் மெண்்ட் மாநில தலைவர் ஃபாத்திமா கனி வாழ்த்தி பேசினார்.

    மாநாட்டு அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர், மாநாட்டு குழு தலைவர் நிஜாம் முகைதீன், மாநில பொதுச் செயலாளர் அகமது நவ்வி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் நன்றி கூறினார்.

    இதில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • யாகசாலை பணிகள் இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்றது.
    • புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

    இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா' கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண்ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

    இந்த கும்பாபிஷேக நேரத்தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரசம்ஹார விழா நடந்தது.
    • உற்சவருக்கு தீபாரதி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ் டியை முன்னிட்டு சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது அனைத்து சிவாலயங்க ளிலும், முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறு வது வழக்கம். சூரனை வதம் செய்து அசுரர்களிடம் இருந்து தேவர்களை காப்பதே சூரசம்ஹாரம் ஆகும்.

    அந்த வகையில் திருச்சுழி பூமிநாதன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாள் நடை பெறும் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யில் முருக பெருமான் சூரனை வதம் செய்தார்.முன்னதாக கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக முருகப்பெரு மான் அம்பிகையிடம் இருந்து சக்தி ஆயுதமான வேலாயுதம் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சோழ வந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று மாலை கோவில் முன்பு நடை பெற்றது. பக்தர்கள் வெற்றி வேல்முருகா, வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டியினர் செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன்-வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனிடம் இருந்து பூஜிக்கப்பட்ட வேல் வழங்கப்பட்டது. அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம் வடிவில் உருமாறி காட்சி அளிக்க முருகன் சூரனை வதம் செய்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவருக்கு தீபாரதி காண்பி க்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    மதுரை

    நாகரீக உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப துரித உண வுகளின் ஆதிக்கமும் அதிக–ரித்துள்ளது. உணவகங்க ளில் சாப்பிட்ட பின்பு உட லில் நச்சுத்தன்மை பரவி உடல் நிலை பாதிக்கப்படுவ தும், அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படும் சம்பவங்க ளால் தமிழகம் அதிர்ந்து போய் உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் கண்காணிப்பு மற் றும் சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

    சமீபத்தில் நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கி வந்த சவர்மாவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந் ததை அடுத்து அதிரடி சோத னைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சவர்மா விற் பனை செய்யும் உணவ கங் கள், அசைவ, சைவ உணவ கங்கள் என அனைத்து உண வகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டி யன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதிக்குப் பின்னர் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் அதிக அளவில் அதிரடி சோதனைகளை நடத்தி வரு கிறோம். கடந்த 2 மாதங்க ளில் 1,497 உணவ கங்களில் அதிரடி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. இதில் இறைச்சியை குளிர்விப்பா னில் வைத்து பல வாரங்க ளுக்கு உணவு சமைப்பதற் காக பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

    மேலும் பொறித்த, வறுத்த மற்றும் தந்தூரி சிக்கன் போன்ற உணவுக ளில் தடை செய்யப்பட்ட வண்ண பொடிகள் பயன்ப டுத்தப்படுவதையும் கண்ட றிந்துள்ளோம். மொத்தம் 101 கடைகளில் இருந்த 320.025 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த உண வகங்களுக்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

    மேலும் விதிகளை மீறி சுகாதாரம் இல்லாமல் உண வுப் பொருள்களை விறங பனை செய்த 123 உணவ கங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. டவுன்ஹால் ரோட் டில் செயல்பட்ட 2 கடைக ளுக்கு சீல் வைக்கப்பட்டுள் ளது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 964 கடைகளில் ஆய்வு செய்யப் பட்டது. இதில் 15 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 13.93 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்தக் கடைகளுக்கு ரூ.75 அபராதம் விதிக்கப்பட்டுள் ளது.

    பாலீத்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டபோ தும் வணிக வசதிக்காகவும், வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்துவதாலும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலீத்தீன் பைகளை பயன்படுத்திய 70 கடைகளிடம் இருந்து அபரா தமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள் ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனைகளை மேலும் அதிகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளோம். விதி மீறலில் ஈடுபடும் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கெட் டுப்போன, சுகாதாரம் இல் லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள், கடைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    தி.மு.க. இளைஞரண சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோ சனை கூட்டம் மற்றும்

    2024-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு சோழ வந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலா ளருமான, அமைச்சருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் 2024 நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சோழவந்தான் பேரூர் சார்பில் அதிகமான வாக்கு களை பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட பொருளா ளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நேரு, ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் வெற்றி செல்வன், சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட பிரதி நிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • புனித மண் டெல்லி செல்கிறது
    • பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    மதுரை

    நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் என்ற பெயரில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுடெல்லியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவிற்கு நாடு முழுவதும் தியாகிகள் வாழ்ந்த பகுதிகளில் மண் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் இருந்து தியாகிகள் வாழ்ந்த இடங்களில் புனித மண் கலசங்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த மண்ணை ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அந்த கலசத்தை கொண்டு வருவர். பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    வருகிற 28-30-ந் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75 ஆயிரம் கலசங்களில் கொண்டு செல்லப்படும் மண் சேர்க்கப்பட்டு பூங்காவில் வைக்கப்படும்.

    மதுரையில் நடைபெற்ற புனித மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார், அனில்குமார், தேசிய சேவை தொண்டர்கள் மீனாட்சி, பிரியங்கா, அபிதா, மணிமொழி, தனசேகரன், கணேசன், ராகவ், என்.எம்.ஆர்.மதுரை காந்தி கல்லூரி முதல்வர் கோமதி, மகிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வைகை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளர்.
    • ஒரேநாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கி றது . வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலே சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாக னங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது. அதற்கு சாட்சியாக சிலர் வாக னத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வு களும் ஆங்காங்கே நடை பெற்றது.

    சாலைகளை எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதே போல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படு கிறது. வானிலை ஆராய்ச்சி மையத்தியின் எச்ச ரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே வைகை ஆற்று வரத்து கால்வாய் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் இன்றைக்கு, ஒரு நாள் மழைக்கு சாலையில் ஆறுகள் போல ஓடும் தண்ணீரை சரி செய்ய உரிய முன் எச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாவட்ட அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்திட ஆய்வு கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • என் மீது களங்கம் ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் செல்லூர் ராஜூ புகார் செய்துள்ளார்.
    • அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள்.

    மதுரை

    நெல்லை மாவட்டம் பணக்குடியைச் சேர்ந்த நவ மணி வேதமாணிக்கம் என்ப வர் கடந்த 1997 ஆம் ஆண்டு சொந்தமாக அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் பணியாளர் கூட்டுறவு சங்கங்களை கணினி மய மாக்குவதற்கான டெண்ட ருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அப்போது கூட்டு றவு துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அந்த டெண்டரை வேறொரு நபருக்கு கொடுத்த நிலையில் தன் நிறுவனம் நஷ்டம் ஏற் பட்டு தற்போது சென்னை யில் கால் டாக்சி ஓட்டிவருவ தாகவும் செய்திகள் வெளி யானது.

    இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் காவல் நிலையத் தில் புகார் மனுவை அளித் தார்.

    பின்னர் அவர் கூறியதா வது-

    தனிப்பட்ட வாழ்க்கையை களங்கம் ஏற்படுத்தும் வித மாக ஒரு நிகழ்வு ஊடகத்தி லும், பத்திரிகையிலும் வந் துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர் தெருவுக்கு கொண்டு வந்தது போல் தலைப்பை போட்டு என்னு டைய 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு களங் கம் விளைவிக்கும் விதமாக என் நேர்மையை கெடுக்கும் வகையில் நான் பணியாற்றிய நிகழ்வை எல்லாம் கொச்சை படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளது. இது என் உள்ளத்தை மிகவும் பாதித் தது.

    என் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மன உளைச் சலும் ஏற்பட்டுள்ளது.

    என்னுடைய நேர்மையை யும், நாணயத்தையும் வே றொருவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.கூட்டு றவுத் துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்வதாக இருந்தாலும் நிபுணர்கள் மற்றும் அதி காரிகள் அடங்கிய குழு தான் முடிவு செய்வார்கள்.

    கணினி கொள்முதல் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகள் தான் முடி வெடுப்பார்கள். துறை அமைச்சர்களை கேட்டு செய்ய மாட்டார்கள்.

    நான் கணினி நிபுணரும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் சம்பந்தம் இல்லா மல் குறை சொல்லும் வகை யில் பேட்டி கொடுக்கப் பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங் கிய கணினி மென்பொருளை வேறொரு நபருக்கு கொடுத் ததாக தான் குற்றம் சொல் கிறார். அது முழுக்க முழுக்க தவறு. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என அனைத்திலும் கணினி மய மாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்ல வில்லை.

    தற்போது தேர்தல் வரு கின்ற நேரத்தில் இதுபோன்ற செய்திகள் வருவதற்கு ஏதோ பின்புலம் இருப்பது போல் தோன்றுகிறது.

    எனவே என் மீது தவறான உள்நோக்கத்துடன் பொய்தகவலை கூறிவரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • மேலூர் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
    • பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை பாரா ளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், ரேசன்கடை, பயணியர் நிழற்குடை கட்டிடங்களை மதுரை பாராளுமன்ற உறுப் பினர் வெங்கடேசன் ரிப் பன் வெட்டி திறந்து வைத் தார்.

    தெற்குதெரு ஊராட்சி டி.தர்மசானப்பட்டியில் 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிதப் பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடிமும், அரசப் பன்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகம் (ரேசன் கடை), கோட்டநத்தம்பட்டி ஊராட் சியில் ரூ. 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங் கன்வாடி கட்டிடம், தனியா மங்கலம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோகம் (ரேசன் கடை) கட்டிடமும், கொங்கம் பட்டி ஊராட்சியில் உள்ள பன்னிவீரன்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும், கொடுக்கம் பட்டி ஊராட்சியில் உள்ள கொன்னப்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், 5 லட்சம் மதிப் பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டிடம், கொட்டாம் பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடமும், பட்டூர் ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணி யர் நிழற்குடை கட்டிடம் திறந்த வைக்கப்பட்டன.

    மேலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜேந்திர பிரபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசப் பன்பட்டி தலைவர் முரு கேஸ்வரி வெள்ளையன், கோட்ட நத்தம்பட்டி உஷா இளையராஜா, தனியா மங்கலம் குமார், கொங்கம் பட்டி சந்தோஷ், கொடுக்கம் பட்டி ராஜா, கொட்டாம் பட்டி பாலசுப்பிரமணியன், தும்பைபட்டி அயூப் கான், மேலூர் தாசில்தார் செந்தா மரை, மேலூர் வட்ட வழங் கல் அலுவலர் நாகராணி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கி வீரணன், மணவா ளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×