search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதநல்லிணக்கம்"

    • கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
    • சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் ராஜா நகரில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் மும்மதத்தினர் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கச்சி மடத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் இணைந்து மத நல்லிணக்கத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தங்கச்சி மடம் ராஜா நகரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ பெரிய கருப்பசாமி மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பூ, பழம், மாலை, இனிப்பு குத்து விளக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நெற்றியில் விபூதி இட்டு தீபாராதனை எடுத்துக் கொண்டனர்.

    கோவிலுக்கு வந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை அன்புடன் வரவேற்ற இந்துக்கள் அவர்கள் கொடுத்த சீர்வரிசைகளை பெற்று கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

    தங்கச்சிமடத்தில் மும்ம தத்தினர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெற்ற கோவில் கும்பாபிஷேக விழா அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார்
    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது

    பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "90 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் மியூசிக் அகாடமி அமைப்பின் புனிதத்திற்கு பிரிவினை சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை மியூசிக் அகாடமியின் அதிகார போக்கிற்கு எதிராக குரல் எழுப்பிய அனைத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் தமிழ்நாடு பாஜக துணை நிற்கிறது.

    ரஞ்சனி, காயத்ரி, திருச்சூர் பிரதர்ஸ், ரவிகிரண், ஹரிகதா, துஷ்யந்த் ஸ்ரீதர்,விசாகா ஹரி, மற்றும் பலர் பழமையான மியூசிக் அகாடமியின் புனிதத்தை பாதுகாக்க பாடுபடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

    டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், "மியூசிக் அகாடமியின் மாநாடு 2024-ல் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுகிறோம்.

    இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் அவர் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.

    பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்.

    கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்" என தெரிவித்துள்ளனர்.

    ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது

    இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

    டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி,  காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், "மியூசிக் அகாடமியின் மாநாடு 2024-ல் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுகிறோம்.

    இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் அவர் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.

    பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்.

    கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்" என தெரிவித்துள்ளனர்.

    ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி, காயத்திரிக்கு எத்தனை ஆணவம். இது பெரியார் மண்" என தெரிவித்துள்ளார்.

    • கருமாத்தூர் புனித கிளாரட் பள்ளியில் சமூக நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
    • பல்சமய உரையாடல் குழு ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் 'சமூக நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கினார். செல்வமணி, உதவி தலைமை ஆசிரியர் ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்சமய உரையாடல் குழு ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

    இறைவன் படைப்பில் நாம் அனைவரும் சமம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி நல்லிணக்க நாள் குறித்து தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் பேசினார்.

    பல்சமய உரையாடல் குழு மாணவிகள் தனுஸ்ரீ, வித்யா, மோனிகா, பிரீத்தி ஆகியோர் கலந்துரையாடல் வழியாக சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள் நடனம் மூலம் தேசிய ஒருமைப்பாடு பற்றி விளக்கினர். முடிவில் ஆசிரியர் அற்புதம் நன்றி கூறினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தமிழ் ெசல்வம், சுஜேந்திரன், ஜெயசீலன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    • கருப்பர் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
    • பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி கிராமம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா, மற்றும் கந்தூரி விழாவில் இந்துக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    அதனடிப்படையில் கரிசல்பட்டியில் வஞ்சினி கருப்பர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த நிலையில் வருடாபிஷேக சிறப்பு பூஜையும் வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது.

    வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழா அன்னதானத்தை முன்னிட்டு கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து கிராம மக்கள் அழைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பட்டு உள்ளிட்ட இந்துக்களின் வழிபாட்டு சீர்வரிசை எடுத்து வந்து மதநல்லிணக்க திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஜமாத்தார்களுக்கு ஊர் மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்வு இந்த பகுதி பாரம்பரியத்தையும் சகோதரத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல் சிங்கம்புணரி அருகே நாகமங்கலத்தில் தாருல் ஹைராத் மதரஸத்துன் நிஸ்வான் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.

    இதில் பங்கேற்ற இந்துக்கள் மந்தையம்மன் கோவிலிலில் இருந்து பள்ளிவாசலுக்கு இனிப்புகள், பழங்களுடன் ஊர்வலமாக சீர் வரிசை கொண்டு வந்தனர்.

    புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    • மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாசிச கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
    • வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூரில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மனிதநேயம் தளைத்தோ ங்க, மத நல்லிணக்கம் செழித்திட, அறம், நெறி தொடர்ந்திட உலகம் முழுவதும் உள்ள இஸ்லா மிய பெருமக்கள் ரமலான் நோன்பை கடைபிடித்து வருகிறார்கள்.

    இன்றைய உலகத்தில் இந்திய ஒன்றியம் தான் குடியரசு இந்தியா என்று டாக்டர் அம்பேத்கர் பிரக டனம் செய்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை ஏற்படுத்தினார்கள்.

    மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டின் அரசிய லமைப்பு சட்டத்தை செல்லாக் காசாக மாற்ற நினைக்கிறது. அரசியல மைப்பு சட்டத்தை தகர்த்தெ றிய துடிக்கிறது. இந்த பாசிச வாதிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    அமைதி பூங்காவாக திகழும் தமிழ் மண் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வளர்த்த பொதுவுடமை மண்ணாக தமிழ்நாடு பக்குவப்பட்டு உள்ளது. திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச ஆர். எஸ். எஸ். கூட்டம் மத நல்லிண க்கத்தை சீர்குலைக்க விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட நினைக்கிறார்கள். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக மரபுகளுக்கு மாறாக செயல்படும் மத்திய பாஜக அரசை வருகிற பொதுத் தேர்தலில் விரட்டி அடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
    • சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டியில் 873-ம் ஆண்டு ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் மத நல்லிணக்க சந்தனகூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 21-ந்தேதி மதியம் மதநல்லிணக்க கந்தூரி விழா மற்றும் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி 10-ம் நாள் கே.புதுப்பட்டி, வலசைப்பட்டி, கரியாம்பட்டி இந்துக்களும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை,சிவகங்கை கரிசல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்று சேர்ந்து மச்சி வீட்டு அம்மா தர்ஹாவில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட உருஸ் எனும் சந்தனகூடு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்றது. விழாவை முன்னிட்டு கண்ணை கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கரிசல்பட்டி சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • வட கர்நாடகாவில் பல இடங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
    • முஸ்லிம் தம்பதியினர் இந்து மடாதிபதிக்கு பாதபூஜை செய்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள ஹட்கோ நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் படே கான் (61). இவர் தார்வாட் மாவட்டம் காரகோப்பாவில் உள்ள ஓம்கார் மடாதிபதி ஸ்வரூபானந்தா சுவாமியின் பக்தர் ஆவார். ஓய்வுபெற்ற பேராசிரியரான சிக்கந்தர் படே கான் குடும்பத்தினர் நேற்று ஸ்வரூபானந்தா சுவாமியை தனது வீட்டுக்கு வரவழைத்தனர்.

    அவருக்கு சிக்கந்தர் படே கான் தன் மனைவியுடன் இணைந்து பாதப்பூஜை நடத்தி 'ஓம் நமசிவாய' என மந்திரத்தை கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை ஸ்வரூபானந்தா சுவாமியும், அவரது சீடர்களும் உண்டனர்.

    இதுகுறித்து சிக்கந்தர் படே கான் கூறுகையில், "நானும் எனது உறவினர்களும் நீண்ட காலமாக‌ ஸ்வரூபானந்தா சுவாமிஜியைப் பின்பற்றி வருகிறோம். அவ்வப்போது சுவாமி எங்கள் வீட்டுக்கு வந்து பூஜை செய்வார்.

    வட கர்நாடகாவில் பல இடங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அண்மை காலமாக அரசியல் காரணங்களுக்காக சிலர் மத ரீதியான பிளவை ஏற்படுத்துகின்றனர்'' என்றார்.

    முஸ்லிம் தம்பதியினர் இந்து மடாதிபதிக்கு பாதபூஜை செய்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    ×