search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple immersion"

    • அலங்காநல்லூர் அருகே பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் 'நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 2 கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடுப்பட்டி கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா மரூர் புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், பின் முதற்கால யாக பூஜை, விசேஷ திவ்யஹோமம், அதைத்தொடர்ந்து இரவு பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பின் இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, ஸாபர்சாஹீதி, காலை 9 மணிக்கு மஹா பூர்ணா ஹீதி, மஹா தீபராதனை நடந்தது.

    காலை 9.30 மணிக்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    குமாரபாளையத்தில் சின்னப்ப நாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கிய விழா பின்னர் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.

    • தேவகோட்டை அருகே ஏழுவன்கோட்டை அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
    • கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஏழுவன்கோட்டை கிராமத்தில் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள்- விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த சில மாதங்க ளுக்கு முன்பு பாலாலயபூஜை நடத்தப்பட்டு கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கும் பணி நடந்தது.

    அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவில் அருகே உள்ள வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து சிவாச்சா ரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    முன்னதாக சிவனடியார் கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை சமஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் தென்னிலை நாட்டார்கள் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி -அம்பாள் மூலஸ்தானங்க ளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட னர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.
    • காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் எழுந்த ருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் மகா மாரி யம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்கா

    ரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்கா வலர் குழுவினர், கால சந்தி கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

    • எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக கல்வடங்கம் காவிரி நதிக்கரையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், பாலதண்டாயுதபாணி சாமி கோவில் சன்னதியில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரம் முழங்க, இன்று காலை கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் முழங்க முருகப்பெ ருமானை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். 

    • பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாத் சர்மா தலைமையில் சிவாச்சாரி யார்கள் 2 நாள் யாக பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சா ரியார்கள், நிர்வாகிகள் புனித நீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பத்திரகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலைவர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் ராஜகுரு, காமராஜ், ஜெயராஜ், கார்த்திகேயன், பாண்டியராஜன், கண்ணன்உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன
    • விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோபுர கலசங்கள், கொடி மரங்களுக்கு தங்க முலாம் பூசுதல், வெள்ளிக் கவசங்களை மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்ேடஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 1982, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் ஜூன் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கடந்த மாதம் கோவில் கலசங்கள், கொடிமரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டன. தொடர்ந்து வரும் ஜூன் 7-ந்தேதி பஞ்சமூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட உள்ளது. பின்னர் யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன.

    இதைத் தொடர்ந்து ஜூன் 25-ந்தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோட்டை ஜலகண்டேஸ்வரர்கோவில் ராஜகோபுரத்தில் உள்ள அனைத்து கலசங்கள், சாமி, அம்மன் சந்நிதிகளில் உள்ள கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே சாமிகளுக்கு அலங்காரம் செய்வதற்கான வெள்ளிக் கவசங்கள் மெருகேற்றி புதுப்பிக்கும் பணியும் நடைெபற்று வருகிறது.

    கோவில் வளாகத்திலேயே அதற்கான வடிவமைப்பாளர்கள் மூலம் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த குழுவினர் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக யாகசாலை சேதமடைந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர்போகியில் சுடலை மாடன் சுவாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை நாளில் விழா நடந்து வந்தது. இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் விழா எடுப்பதில் சிக்கல் எழுந்தது.

    இதனால், இவர்களில் ஒருவரான மாடசாமி என்பவர் தனது உறவினர்களுடன் பிரிந்து சென்று புதியதாக கட்டிய கோவிலுக்கு வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது புதிய கோவில் சேதப்பட்டு கிடந்தது. இது குறித்து புதிய கோயில் பூசாரி மாடசாமி கூறுகையில், சுடலை மாடன் சுவாமி கோயிலில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கிருந்து விலகி எனது பட்டா நிலத்தில் புதிய கோவில் கட்டி, வரும் 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளேன்.

    இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது கலசங்கள் எடுத்துச் செல்ல அமைத்த சாரம், யாகசால கூடங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் விசாரித்து தேர்போகி மாடசாமி கோவிலை சேர்ந்த கர்ணன், சாமிநாதன், மோகன், நாகேந்திரன், சுகா, முருகன், தட்சிணாமூர்த்தி, ஈஸ்வரன், வெள்ளைச்சாமி, வெங்கடேஷ், ராஜ்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×