search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
    X

    கவசங்கள் மெழுகேற்றும் பணி நடைபெற்ற காட்சி.

    ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

    • யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன
    • விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோபுர கலசங்கள், கொடி மரங்களுக்கு தங்க முலாம் பூசுதல், வெள்ளிக் கவசங்களை மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்ேடஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 1982, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் ஜூன் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கடந்த மாதம் கோவில் கலசங்கள், கொடிமரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டன. தொடர்ந்து வரும் ஜூன் 7-ந்தேதி பஞ்சமூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட உள்ளது. பின்னர் யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளன.

    இதைத் தொடர்ந்து ஜூன் 25-ந்தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோட்டை ஜலகண்டேஸ்வரர்கோவில் ராஜகோபுரத்தில் உள்ள அனைத்து கலசங்கள், சாமி, அம்மன் சந்நிதிகளில் உள்ள கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே சாமிகளுக்கு அலங்காரம் செய்வதற்கான வெள்ளிக் கவசங்கள் மெருகேற்றி புதுப்பிக்கும் பணியும் நடைெபற்று வருகிறது.

    கோவில் வளாகத்திலேயே அதற்கான வடிவமைப்பாளர்கள் மூலம் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த குழுவினர் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×